ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டாம்…! விபரம்:-

Read Time:2 Minute, 27 Second

2019 இடைக்காலப் பட்ஜெட்டில் எதிர்பார்த்தபடியே நடுத்தர குடும்பத்தினர் பயனடையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடைசி பட்ஜெட் என்பதாலேயே இதற்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தன. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே மத்திய அரசு, “ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரிச்செலுத்த தேவையில்லை!” என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விபரம்:-

வருமான வரித்துறை சலுகை 3 நடுத்தர குடும்பத்தினருக்கு பயனளிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

* தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்
ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டாம்.

* ஒட்டுமொத்த வருமான வரிசலுகையால் 6.50 லட்சம் வரையில் இனி வருமான வரி கட்ட வேண்டிய தேவையில்லை. அதாவது, ரூ.6.50 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்கள், பிஎப், பங்குவர்த்தகம், பரஸ்பர நிதித்திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்தால் வருமானவரி செலுத்தத் தேவையில்லை.

* நிரந்தர கழிவுத் தொகை விலக்கு ரூ.40 ஆயிரமாக இருந்த நிலையில், ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* அஞ்சல் நிலையங்கள், வங்கியில் டெபாசிட் மூலம் வட்டி வருமானம் பெறுபவர்கள் நிரந்தரக் கழிவு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* 80-சி மூலம் கழிவு பெறுவது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* வீட்டுக்கடன் வட்டியாக ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் செலுத்திவருபவர்கள் கழிவு பெறுவது ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகையில் இருந்து பெறும் வரிச்சலுகை ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது