காங்கிரஸை கடுமையாக தாக்கிய பிரதமர் மோடி; 10 குறிப்புக்கள்

Read Time:3 Minute, 28 Second

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக தாக்கி பேசினார். பிரதமர் மோடி பேச்சின் 10 முக்கிய குறிப்புக்கள்:-

1) மத்தியில் உள்ள அரசு நேர்மையானது மற்றும் ஏழைகளுக்கானது என்று அறியப்படுகிறது. முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்களை வரவேற்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன்.

2) பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் குற்றம் சாட்டும் சிலர் இந்தியாவையும் தாக்கிப்பேச தொடங்கிவிட்டார்கள். இதனை ஏற்க முடியாது. பொருளாதார அடிப்படையில் உலகளவில் இந்தியா 11-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

3) காங்கிரஸ் தலைமையிலான அரசு 55 ஆண்டுகளில் செய்யாததை பா.ஜனதா வெறும் 55 மாதங்களில் செய்துள்ளது.

4) ராணுவத்தின் கவுரவத்தை காங்கிரஸ் குலைத்தது. அவர்களைப் பொறுத்தமட்டில் நான் செய்த குற்றம் என்ன தெரியுமா? ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த நான், இன்றைக்கு அவர்களின் பரம்பரை ஆட்சிக்கு சவாலாக வந்து விட்டேன் என்பதுதான்.

5) அவர்கள் (காங்கிரஸ்) மெகா கூட்டணி என்று சொல்கிறார்கள். இந்த மெகா கூட்டணி, கலப்பட கூட்டணி.

6) காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடைகள் வழங்கப்படவில்லை. ஆனால் 2016-ல் நாங்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கவச உடைகளை வழங்கி இருக்கிறோம்.

7) நாங்கள் யாருக்கும் சாதகமாக நடக்கவில்லை. ஊழல்வாதிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

8) ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் 3 லட்சம் மோசடி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

9) காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்றுதான் மகாத்மா காந்தி பரிந்துரை செய்தார். எனவேதான் என்னுடைய கோஷம், காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பதாகும். மகாத்மா காந்தியின் விருப்பத்தைத்தான் நிறைவேற்றுகிறேன்.

10) இந்திய விமானப்படை வலிமையாவதை காங்கிரஸ் விரும்பவில்லை. இது என்னுடைய முக்கியமான குற்றச்சாட்டாகும். இந்த ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், இதற்கு பின்னால் இருப்பது யார்? எந்த நிறுவனம்?. நம்முடைய அண்டைய நாடுகள் போருக்கு தயாராகும் நிலையில் கட்டமைத்து வருகிறார்கள். இதனை ஏன் நாம் செய்யவில்லை. இது கிரிமினல் அலட்சியம். காங்கிரஸ் ஒரு வலுவான இந்திய விமானப்படை விரும்பவில்லை.