தமிழகத்தின் கடன் சுமை ரூ. 4 லட்சம் கோடி…!

Read Time:3 Minute, 15 Second

2019 தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய பட்ஜெட்டை போலவே தமிழக பட்ஜெட்டிலும் மக்களவை கவரும் திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்படலாம் என எதிபார்ப்பு எழுந்தது. நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தமிழக பட்ஜெட் 2019- 2020தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதியாண்டில் தமிழக அரசின் செலவு மற்றும் வருவாய் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வரி விகிதம் எதுவும் உயர்த்தப்படவில்லை. தமிழக அரசின் நிகர கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வருவாய் என்ன?

1) மாநில ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 96177.14 கோடி

2) மதுபானங்கள் விற்பனைக்கு விதிக்கப்படும் எக்சைஸ் வரி: ரூ. 7262.33 கோடி

3) பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 13122.81 கோடி

4) வாகனங்கள் விற்பனை, பதிவு மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 6510.70 கோடி

5) மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் பங்கு: ரூ. 30638.87 கோடி

6) தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசின் பங்குத் தொகை: ரூ. 25602.74 கோடி

தமிழக அரசின் செலவு என்ன?

அனைத்து வகையான மானியங்களுக்கும் செலவு செய்யும் தொகை: ரூ. 82673.32 கோடி

அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு செலவு செய்யும் தொகை: ரூ. 55399.74

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக செலவு செய்யும் தொகை: ரூ. 29627.11 கோடி

வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை: ரூ. 33226.27 கோடி

அரசு நிறுவனங்கள் பராமரிப்புச் செலவு: ரூ. 11083.42 கோடி

மொத்த வரவும் செலவும்

தமிழக அரசின் மொத்த வருவாய்: ரூ. 197721.17 கோடி

தமிழக அரசின் மொத்த செலவு: ரூ. 212035.93 கோடி

பற்றாக்குறை: ரூ. 14314.76 கோடி

கடன் சுமை ரூ. 4 லட்சம் கோடி

பட்ஜெட்டில் வரும் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ. 197721.17 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழக அரசின் மொத்த செலவு ரூ. 212035.93 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் நிதியாண்டில் பற்றாக்குறை ரூ. 14314.76 கோடி என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து தமிழக அரசு வாங்கி வரும் கடன் அளவு அதிகரித்து கொண்டு வருகிறது. கடனை பொறுத்தவரை ரூ. 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மட்டும் ரூ. 33226.27 கோடியாக உள்ளது.