‘டுவிட்டர்’ சிஇஓ ஜாக் டோர்சி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு 15 நாட்கள் கெடு

Read Time:5 Minute, 54 Second

சமூக வலைதளங்களில் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான விவகாரத்தில் 15 நாட்களுக்குள் டுவிட்டர் ஆஜராக வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு 15 நாட்கள் கெடு விதித்துள்ளது.

இந்தியாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துக்கொண்டு செல்கிறது. சமூக வலைதளங்கள் பயனாளர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களை பெறுகிறது. இவை பாதுகாப்பு அற்றவையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தியாவில் டுவிட்டரும் இதுபோன்ற பிரச்சனையை எதிர்க்கொண்டுள்ளது.

ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது

2019 தேர்தலில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. சமூக வலைதளங்கள் தங்களுடைய இணையங்களை தவறாக பயன்படுத்த அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் வெளிப்படையாகவே அரசியல் கட்சிகள்தான் தவறான தகவல்களை பரப்புகிறது என குற்றம் சாட்டுகிறது.

தேர்தல் நெருங்கும் நிலையில் வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக டுவிட்டார் நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

டுவிட்டர் இந்தியா மறுப்பு

இதனை மறுத்த டுவிட்டர் நிறுவனம், பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் வெளிப்பட வேண்டும், அவர்களது குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பதே டுவிட்டரின் சேவை. வெளிப்படைத் தன்மை, நம்பகத்தன்மை மற்றும் பாரபட்சமின்மை போன்ற கொள்கைகளை மேற்கொள்வதில் ட்விட்டர் உறுதி பூண்டுள்ளது. எங்களது டுவிட்டர் விதிகளை அமல்படுத்த, உலக நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேசக் குழு உள்ளது. அதனால், ட்விட்டர் இந்தியா ஊழியர்கள் விதிமுறைகளை அமல்படுத்துவதில்லை. நியாயத்தையும், பாரபட்சமின்மையும் அவர்கள் உறுதி செய்வார்கள்.

உலகக்கின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 4-வது பெரிய வளர்ந்து வளரும் பயன்பாட்டாளர்கள் அதிகமுள்ள நாடு இது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு நியாயமான தகவல்களை உறுதி செய்வதை தவிர எங்களுக்கு வேறு பணியில்லை. இந்த தேர்தல் சமயத்தில் அதற்காக தேசிய அளவிலான உரையாடல்களை உறுதி செய்வோம் என்றது.

பிற நாட்களில் விசாரணை

சமூகவலைதளமான டுவிட்டர் மீது நாடுகள் எடுக்கப்படும் விசாரணை நடவடிக்கை தொடர்கதையாக உள்ளது.

அமெரிக்க காங்கிரஸ், சிங்கப்பூர், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக இந்தியா நாடாளுமன்றம் டுவிட்டர் மீது விசாரணை நடத்தி வருகிறது.

நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்

சமூக வலைதளங்களில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், இதுபற்றிய விசாரணைக்காக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழு ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி சம்மன் அனுப்பியது. அந்த சம்மன் கடிதத்தில் பிப்ரவரி 7-ம் தேதி அதில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் நாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், அனைவரும் ஆஜராக வேண்டும் என்பதால் விசாரணை தேதி பிப்ரவரி 11-க்கு மாற்றப்பட்டது.

டுவிட்டர் மறுப்பு

இதைத்தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான சட்ட வழக்கறிஞர் விஜய் காடி அனுப்பியுள்ள கடிதத்தில், ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜராக மறுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு, மிகக் குறுகிய காலத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதால் வருவது கடினம். பயண காலமே பத்து நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் டுவிட்டர் நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவினரை சந்திப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

15 நாட்கள் கெடு

அதன்படி டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகள் தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக வருகை தந்தனர். நாடாளுமன்ற துணை கட்டடத்தில் உள்ள நிலைக்குழு அலுவலகத்தில் சந்திக்க சென்றனர். ஆனால் பாஜகவைச் சேர்ந்த அனுராக் தாக்கூர் தலைமையிலான தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அவர்களை சந்திக்க மறுத்து விட்டது. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அல்லது மூத்த அதிகாரிகள் இந்தியா வந்து நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என புதிய சம்மன் அனுப்பட்டுள்ளது.