வங்கக் கடலில் நிலநடுக்கம் – சென்னையில் நில அதிர்வு

Read Time:1 Minute, 22 Second

வங்கக் கடலில் 4.9 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் நேரிட்டதன் காரணமாக சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டது.

சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் வங்க கடலில் 10 கிமீ ஆழத்தில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. சில வினாடிகள் நில அதிர்வு இருந்ததாக, பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு அறிக்கையின்படி சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10கி.மீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டுள்ளது.பொதுவாக அந்தமான் நிகோபர் தீவுகளில் இதுபோன்று நில அதிர்வு அடிக்கடி ஏற்படுவது உண்டு. தற்போது சென்னைக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டு இருப்பது சென்னை வாசிகளை அச்சம் அடையச் செய்துள்ளது.