இணையத்தை கலக்கும் அனுஷ்கா…! 

Read Time:4 Minute, 38 Second

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக தன்னுடைய முத்திரையை பதித்தவர் அனுஷ்கா.

கடைசியாக அனுஷ்கா நடித்து பாக்மதி படம் வந்தது. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அவர் உடல் எடையை கூட்டியதை பிறகு குறைக்க முடியவில்லை. இதற்காக கடும் உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள் மேற்கொண்டும் பலன் இல்லை.

யோகா உள்ளிட்ட பலவகையில் முயற்சி செய்த போதும் அனுஷ்காவின் எடை குறையவே இல்லை.இருப்பினும் அவரால் பழைய தோற்றத்திற்கு முழுமையாக வரமுடியவில்லை. ‘பாகுபலி’ படத்தில் மிகவும் ஒல்லியாக காண்பிக்கப்பட்டார். அதில் இவரை ஒல்லியாக காட்டுவதற்காகவே ஸ்பெஷல் எபெக்ட் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.  அனுஷ்கா எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது அதற்கான காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுத்த அனுஷ்கா எடையை குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.

உலக அளவில் பிரபலமான வாழ்க்கைமுறைப் பயிற்சியாளர் மற்றும் நிபுணர் லூக் கொடினோ மூலமாக தன் உடல் எடையை குறைத்து மீண்டும், பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார் அனுஷ்கா. இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் முன்பைவிட மிகவும் அழகாக உள்ளார் என எல்லோருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. அனுஷ்காவின் அழகை வர்ணித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.  இது நம்ம அனுஷ்காவா? என ரசிகர்கள் ஆச்சர்யமாகவும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். வெள்ளை உடையில் அவர் பாறையின் மீது இருந்து எடுத்த புகைப்படம் மிகவும் கவனம் பெற்றுள்ளது.

அனுஷ்காவின் உடல் எடை குறைப்பு குறித்து லூக் கொடினோ “அற்புதமான, அழகான, எளிமையான, பணிவான, இனிமையான அனுஷ்கா ஷெட்டி. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை புதிய மதமாக்கி, தேசத்தின் ஆரோக்கியத்தை மாற்றுவதற்கு எங்களிடம் திட்டமும், நோக்கமும் உள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவும், ஆசிர்வாதமும், அன்பும் எங்களுக்குத் தேவை. கிடைக்குமா?” என்று கேட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழ்–தெலுங்கில் தயாராகும் ‘சைலன்ட்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட நடிகர்களுடன் ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கும் ‘சைலன்ஸ்’ படத்தில் நடிக்க அனுஷ்கா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இது வசனமே இல்லாத படம் என்பதால், அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. புதிய படத்தில் நடிப்பதால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.