வேறு வழியில்லாமல் இந்தியாவால் விடுதலை செய்யப்பட்டவன்… விஷமாக உருவாகி நிற்கிறான்

Read Time:3 Minute, 51 Second

வேறு வழியில்லாமல் இந்தியாவால் விடுதலை செய்யப்பட்டவன் இன்று விஷமாக உருவாகி நிற்கிறான்.

உலகின் மிக முக்கிய பயங்கரவாதியாக இருந்து வரும் மசூத் அசாரும், அவரது ஜெய்ஷ் -இ- முகமது இயக்கமும் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நேபாளம் தலைநகர் காட்மண்டுவில் இருந்து இந்திய விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தினர். அபோது பயணிகளை விடுவிப்பதற்காக, பயங்கரவாதி மசூத் அசார் உள்பட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர். இப்போது அதே மசூத் அசார்தான் இந்தியாவிற்கே பெரும் வில்லனாகவும், விஷமாகவும் உருவாகி நிற்கிறான்.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சியைதான் சீனா தடுக்கிறது.

* இந்தியாவின் பிடியிலிருந்து தப்பிய மசூத் அசார் 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத அமைப்பை நிறுவினான்.

* 2000-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் தாக்குதலையடுத்து, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் குழுதான் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

* 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியது ஜெய்ஷ் – இ- முகமது இயக்கமே.

* 2002-ம் ஆண்டில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டாலும் மசூத் அசார் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பஹவல்பூரில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

* அசாரை தங்களிடம் ஒப்படைக்க இந்தியா அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவர் பாகிஸ்தானில் தங்கி இருக்கவில்லை என பாகிஸ்தான் மறுத்து வந்திருக்கிறது.

* கடந்த 2016 செப்டம்பரில் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக செப்டம்பர் 28-ம் தேதி காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் நுழைந்து ஏராளமான பயங்கரவாத முகாம்களை அழித்தனர்.

* 2016-ம் ஆண்டு பதன்கோட் விமானப்படைத் தளம் மீது தாக்குதலையும் திட்டமிட்டு செய்ததது.

* 2016-ம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் உரி தாக்குதலில் 20 ராணுவத்தினர் இறந்தனர்.

* 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி, லேத்போரா துணை ராணுவ பயிற்சி மையத்தின் மீது 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 5 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

* இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில், பர்தீன் அகமது கான் என்ற 17 வயது இளைஞரும் ஒருவர். இவரும் கான்டிபாக் கிராமத்தைச் சேர்ந்தவர்தான்.

* கடந்த 2000-ம் ஆண்டு, ஸ்ரீநகரில் துணை ராணுவ முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி அகமது ஷா. மாருதி காரில் வெடிகுண்டுகளை நிரப்பி , துணை ராணுவ மையத்துக்குள் புகுந்து வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் 15 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

* தற்போது, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது ஜெய்ஷ் -இ- முகமது இயக்கம்.