தேசிய பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சிந்துவை சாய்த்து பட்டம் வென்றார் சாய்னா…

Read Time:1 Minute, 22 Second

83–வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிவி சிந்துவை சாய்த்து சாய்னா பட்டம் வென்றார்.

83–வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் முன்னணி வீராங்கனைகள் பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் மோதினர். இறுதி ஆட்டத்தில் சிந்து–சாய்னா பலப்பரீட்சையால் ஆட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. போட்டியின் தொடக்கம் முதலே சாய்னா ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். அனுபவ வீராங்கனையான சாய்னா, சிந்துவின் தவறுகளை புள்ளியாக்க தவறவில்லை. சிந்துவும் ஆட்டத்தை எளிதாக சாய்னாவிடம் கொடுத்துவிடவில்லை.

முதல் செட்டில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் செட்டை 21-18 என்ற கணக்கில் சாய்னா வென்றார். இரண்டாவது செட்டிலும் அதே வேகத்தை காட்டிய சாய்னா, 21-15 என்ற கணக்கில் செட்டை தனதாக்கி பட்டம் வென்றார்.