ஒரு அடியிலே நடுங்கி, உளறியவன்… பயங்கரவாதி மசூத் அசார் பற்றி அதிகாரி ‘ஓபன் டாக்’..!

Read Time:4 Minute, 35 Second

புல்மாவா பயங்கரவாத தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் இன்று மிகப்பெரிய பயங்கரவாதியாக அடையாளம் காணப்படுகிறான். இவனை ஏற்கனவே இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.

காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பில் கோஷ்டி மோதலை தீர்த்து வைக்க காஷ்மீர் வந்த பயங்கரவாதி மசூத் அசாரை 1994-ல் இந்திய பாதுகாப்பு படை கைது செய்தது. போர்ச்சுகீசிய பாஸ்போர்ட் மூலம் வங்காளதேசம் வழியாக காஷ்மீருக்கு வந்துள்ளான். அப்போது பாதுகாப்பு படை அவனை ஆனந்த்நாக் பகுதியில் வைத்து கைது செய்தது.

1999-ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி -814 காந்தகாரில் இருந்து கடத்தியது

1999-ம் ஆண்டு நேபாளத்தில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்திய அரசால் அவன் விடுவிக்கப்பட்டான். 180 பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் பயங்கரவாதிகள் மூவரை விடுதலை செய்ய அப்போதைய வாஜ்பாய் அரசு சம்மதம் தெரிவித்தது. இதனையடுத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை தொடங்கிய மசூத் அசார் இந்தியாவில் பல்வேறு கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றான். இந்நிலையில் 1994-ல் மசூத் அசாரை அப்போது விசாரித்த விசாரணை அதிகாரி, இந்திய பாதுகாப்பு படையின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் அவினேஷ் மோகானானி பேசுகையில், ஒரு அடியிலே நடுங்கி, உளறியவன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ராணுவ வீரர் கொடுத்த ஒரு அடியில் மசூத் அசாத்  பயங்கரவாத இயக்கத்தின் அனைத்து திட்டத்தையும் உளறியவன், அவனை கையாள எந்தஒரு கடினமும் தெரியவில்லை. அவனை விசாரிப்பது உளவுத்துறைக்கு மிகவும் எளிதான காரியமாகவே இருந்தது. கன்னத்தில் இந்திய ராணுவ வீரர் கொடுத்த ஒரு அடியிலேயே பயங்கரவாத இயக்கம் எப்படி செயல்படுகிறது. அதனுடைய அடுத்த நடவடிக்கை என்ன என்பதை வரிசையாக உளறினான்.

பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் எவ்வாறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள், பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவில் எப்படி மறைமுகமான தாக்குதலை நடத்துகிறது என்பதையும் அடிக்கும் முன்னதாகவே தெரிவித்துவிட்டான் என கூறியுள்ளார். “கோட் பால்வால் சிறையில் அவனை பலமுறை சந்தித்து விசாரணையை மேற்கொண்டேன். மணி கணக்கில் விசாரணை நடைபெறும். அவனிடம் இருந்து தொடர்ச்சியாக தகவல்களை பெற நாங்கள் எந்தஒரு கடினமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக காஷ்மீருக்குள் நுழைவது கடினம் என கருதியதால் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்தேன் என்று அவனே கூறிவிட்டான். கேள்விகளைக் கேட்கும் போது, அசார் விளக்கமான விடையை கொடுத்தான்,” என்றார். 1994 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மசூத் அசார் கைது செய்யப்பட்ட சில மாதங்களுக்கு பின்னர் சில வெளிநாட்டவர்கள் டெல்லியிலிருந்து கடத்தப்பட்டனர். கடத்தல்காரர்கள் அசாரை விடுதலை செய்ய கோரினர். ஆனால் நடக்கவில்லை.  அப்போது விசாரணை அதிகாரிகளிடம், “பாகிஸ்தானில் என்னுடைய செல்வாக்கு என்ன என்பதை நீங்கள் குறைத்து மதிப்பீடு செய்கிறீர்கள்.  நான் பாகிஸ்தானில் இருப்பேன் என்பதை பாகிஸ்தானில் உளவுத்துறை உறுதிசெய்யும்” என கூறியுள்ளான். இறுதியில் அப்படியே விமான கடத்தல் விவகாரத்தில் விடுதலை ஆனான்.