ஐயோ அவரு ஒரு டம்மி பீசு…. இம்ரான் கான் முன்னாள் மனைவி தடாலடி…!

Read Time:2 Minute, 43 Second

பாகிஸ்தானை பொருத்தவரையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு என்பது பெயர் அளவிற்குதான். அங்கு அதிகாரம் எல்லாம் ராணுவம் வசம்தான் உள்ளது. உள்ளூர் மக்களே ராணுவம் வசம் ஆட்சியிருப்பதையே விரும்புகிறார்கள். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் தன்மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கிறது. தாக்குதல் நடந்து 6 நாட்கள் ஆன பின்னர் பாகிஸ்தான் பிரதமர் மறுப்பு தெரிவித்து, இந்தியா தாக்குதலை தொடுத்தால் பதிலடி கொடுப்போம் என வீர வசனம் பேசியுள்ளார். இந்நிலையில் அவருடைய முன்னாள் மனைவி பேசுகையில், இம்ரான் கான் ராணுவம் கையில் உள்ள ஒரு பொம்மைதான் என கூறியுள்ளார்.

இம்ரான் கன் முன்னாள் மனைவி ரஹிம்கான் இந்தியா டுடேவிற்கு அளித்துள்ள பேட்டியில், ராணுவம் கொடுக்கும் உத்தரவிற்காக இம்ரான் கான் காத்திருந்திருப்பார்… என கூறியுள்ளார்.

“இம்ரான் சித்தாந்தம் மற்றும் கொள்கையை சமரசப்படுத்திதான் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளார். என்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்படுகிறது. தேர்தல் நேரங்களில் புதிய தீவிரவாத மதக் கட்சிகளின் எழுச்சியை பார்த்து இருக்கலாம், இஸ்லாமாபாத்தில் கலவரங்களையும் பார்த்து இருக்கலாம். இம்ரான் கானும் ஒரு மதகுருமாதிரியாகதான் பயன்படுத்தப்பட்டுள்ளார். இந்திய பிரதமர் வலியுறுத்துகிறார் என்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது, பாகிஸ்தானின் நலனுக்காக பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

இம்ரான் கான் சரியாகவே பேசியிருக்கிறார் என்று வைத்துக்கொண்டால் கடந்த 7 மாதங்களில் எந்தஒரு நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லையே…” என பேசியுள்ளார் ரஹிம்கான். ஜெய்ஷ் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் பாகிஸ்தான் வரலாறு கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கான் யாரோ எழுதி கொடுத்ததை பேசியுள்ளார் அவ்வளவுதான் என கூறியுள்ளார் ரஹிம்கான்.