ஓடுங்க.. ஓடுங்க… பயங்கரவாதிகளை பாதுகாக்கும் பாகிஸ்தான்…! காரணம் இதுதான்…!!

Read Time:4 Minute, 31 Second

புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பாதுகாப்பு படைகள் சரியான பதிலடியை கொடுக்கும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்களையோ, உளவுத்துறை தகவலையோ தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.

இதற்கிடையே தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பை அமல்பலப்படுத்தும் விதமாக ஆவணங்களை சேகரிக்கும் பணியை இந்தியா தீவிரமாக செய்து வருகிறது.

புல்வாமா தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. மீண்டும் மசூத் அசாருக்கு தடை விதிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இந்தியாவின் பதிலடி வேறு விதமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின்லேடனை எப்படி அமெரிக்கா கொன்றதோ, அதுபோன்ற தாக்குதல் இருக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் இருக்கிறது. சர்வதேச அளவில் அழுத்தமும் பாகிஸ்தானுக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

“தாக்குதல் நடத்தியதில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க இந்தியப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.”

இதற்கிடையே பாகிஸ்தானுக்குள் சென்று அதிரடியான தாக்குதலை நடத்த இந்தியப்படை தயாராகிறது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் கோபம் மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமான வார்த்தை கிடையாது, எப்படி இந்திய அரசு பதிலடியை கொடுக்க உள்ளது என்பதை தெரிவிக்க விரும்பவில்லை. சரியான பதிலடியை கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரமும் வழங்கப்படுகிறது என பிரதமர் மோடி ஏற்கனவே கூறிவிட்டார்” என குறிப்பிட்டார்.

இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி மசூத் அசாரை பாதுகாக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையும் ஈடுபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் சர்வதேச பார்வையில் படுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

மசூத் அசார், ஹபீஸ் சயீத்.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அங்கு சுதந்திரமாக சுற்றிவருகிறான், மேலும் அரசியல் கட்சியையும் தொடங்க முற்படுகிறான். இருவரையும் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும் பாகிஸ்தான் இருவரையும் பதுங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎஸ் வெடிகுண்டு பாகிஸ்தான் ராணுவம் வழங்கியது என உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவ தலைமையகமாக ராவல்பிண்டியில்தான் ஆர்டிஎஸ் வெடிகுண்டு ஜெய்ஷ் பயங்கரவாதிகளிடம் அந்நாட்டு ராணுவம் வழங்கியுள்ளது என தெரியவந்துள்ளது. இந்தியா அதிரடியான நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என உஷார் நிலையில் பாகிஸ்தானும் இருக்கிறது.