இந்தியா 20 குண்டுகளில் அழித்துவிடும்… ‘ரிஸ்க் வேண்டாம்’ பாகிஸ்தான் முன்னாள் அதிபர் எச்சரிக்கை

Read Time:3 Minute, 10 Second

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த தற்கொலை தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா கொடுக்கும் நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் விழிபிதுங்கி நிற்கிறது. ஐ.நா. சமாதான முயற்சிக்கு வரவேண்டும் என்கிறது. இப்போது, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் நிர்வாகத்தை தாண்டியும் சீனா பாதுகாக்கிறது. ஜெய்ஷ் தலைமையகத்தை அரசு கைப்பற்றியதாக கூறப்பட்டது, ஆனால் மறுப்பு வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதல்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் பேசுகையில், புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் மசூத் அசார்தான் மூளை என்றும், அவர் மீது தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான். ஆனால் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை என்றார். இந்தியாவிற்கு எதிராக போர் என்ற கோஷம் பாகிஸ்தானில் முழங்கி வருகிறது. மீடியாக்களும் அதுபோன்றே செய்திகளை வெளியிடுகிறது.

‘இந்நிலையில் போரென்றால் இந்தியா நம்மை 20 குண்டுகளில் அழித்துவிடும்’ என முஷரப் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

பர்வேஸ் முஷரப்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு இப்போது மிகவும் மோசமான அளவிற்கு சென்றுள்ளது. இருதரப்பு இடையே அணுஆயுத தாக்குதல் நிகழ்ந்துவிடக்கூடாது. இந்தியாவிற்கு எதிராக ஒரு ஆட்டோமெட்டிக் குண்டை பாகிஸ்தான் பயன்படுத்தினால், இந்தியா பதிலுக்கு 20 குண்டுகளை பயன்படுத்தி நம்மை முற்றிலுமாக அழித்துவிடும். இதற்கு ஒரேவழி நாம் முன்கூட்டியே 50 குண்டுகளை பயன்படுத்த வேண்டும். இந்தியா 20 குண்டுகளை பயன்படுத்துவதற்கு முன்னதாக இதனை செய்ய வேண்டும். 50 குண்டுகளுடன் தாக்குதலை நடத்த நீங்கள் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணுவ தளபதியாக இருந்த முஷரப் 1999-ம் ஆம் ராணுவ புரட்சியால் ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். இப்போது பல்வேறு வழக்குகளில் சிக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்.