பாகிஸ்தானில் விமானப்படை தாக்குதலில் பெருமளவு பயங்கரவாதிகள் சாவு: உஷார் நிலையில் இந்திய ராணுவம்…!

Read Time:6 Minute, 8 Second

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பெருமளவு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் பலியாகினர் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத முகாம்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் சுமார் 1000 கிலோ வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதல்.

இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவமும் எல்லை கடந்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தலாம் என்று பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றது.


புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி… இந்திய விமானப்படை பாக். பயங்கரவாத முகாம்களில் குண்டு மழை…!


பாகிஸ்தான் மறுப்பு

பயங்கரவாத முகாம்களை இந்தியா தகர்த்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில், இந்திய விமானப்படை முசாஃபராபாத் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்றது. ஆனால் பாகிஸ்தான் வெடிகுண்டுகளை வீசி தக்க பதிலடி கொடுத்து இந்திய விமானப் படையை திருப்பி அனுப்பியது என்று பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானிலும் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறுகிறது, அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெருமளவு பயங்கரவாதிகள் சாவு

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பெருமளவு பயங்கரவாதிகள் உயிரிழந்து உள்ளனர் என இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரேஜ் 2000

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஜய் கோக்லே பேசுகையில், “இந்தியாவில் தற்கொலை தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு நம்பதகுந்த தகவல்கள் கிடைத்தது. ஜெய்ஷ் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு முன் கூட்டிய தாக்குதல் தேவையென திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியா பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களில் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள் என அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானை பதம்பார்த்த இந்திய விமானப்படையின் ‘மிரேஜ் 2000’ ஜெட் போர் விமானம்…!


எல்லையில் உஷார்

“பஞ்சாபின் அம்பாலா விமானப்படை முகாமில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட விமானங்கள், சர்வதேச எல்லையை தாண்டாமல் குண்டுகளை வீசியது. மொத்தம் முப்பது நிமிடங்கள் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்ப வந்தன. சுமார் அதிகாலை மூன்றிலிருந்து மூன்றரை மணி வரை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது.” என இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ராணுவம்.

எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து இந்திய துருப்புகளும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நீண்டகால நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு இருக்கும் என்றும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய தலைவர்கள் வரவேற்பு

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கு இந்திய மக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டுக்களை பகிர்ந்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விமானப் படை விமானிகளின் தைரியத்துக்கு தலை வணங்குகிறேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய விவசாயம் மற்றும் விசாயிகள் நலத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெக்வாட், “இந்தியா, பாகிஸ்தான் இடையேயுள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியை சுற்றி அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை, இன்று அதிகாலை வான் வழி தாக்குதலின் மூலம் இந்திய விமானப்படை முழுவதுமாக அழித்துள்ளது” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.