புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி… இந்திய விமானப்படை பாக். பயங்கரவாத முகாம்களில் குண்டு மழை…!

Read Time:4 Minute, 13 Second

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் குண்டுகளை வீசியுள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14–ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. இனி பேச்சுவார்த்தை என்பது கிடையாது, நடவடிக்கைதான். பதிலடியை கொடுக்க இந்திய பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.


பாகிஸ்தானில் விமானப்படை தாக்குதலில் பெருமளவு பயங்கரவாதிகள் சாவு: உஷார் நிலையில் இந்திய ராணுவம்…!

தாக்குதல் நடத்தப்பட்ட இடம்.

இதனையடுத்து புல்வாமா தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை என மறுத்த பாகிஸ்தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடியை கொடுப்போம் என்று கூறியது. இருதரப்பிற்கும் இடையே கடுமையான பதற்றம் காணப்பட்டது.


பாகிஸ்தானை பதம்பார்த்த இந்திய விமானப்படையின் ‘மிரேஜ் 2000’ ஜெட் போர் விமானம்…!


இந்தியா 20 குண்டுகளில் அழித்துவிடும்… ‘ரிஸ்க் வேண்டாம்’ பாகிஸ்தான் முன்னாள் அதிபர் எச்சரிக்கை


விமானப்படை அதிரடி

இந்நிலையில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் அதிரடியாக நுழைந்து பயங்கரவாத முகாம்களை தகர்த்துள்ளது. இன்று அதிகாலை 3:30 மணியளவில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையை தாண்டிய விமானப்படைகள் பயங்கரவாத முகாம்களில் சுமார் 1000 கிலோ எடைக்கொண்ட குண்டுகளை வீசியுள்ளது என விமானப்படை தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத முகாம்களில் குண்டு மழை.

* விமானப்படைகள் குண்டுகளை வீசியதில் பலாகோட் பகுதியில் கடுமையான சத்தம் கேட்டதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதனால் நேரிட்ட சேதம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.


* இந்திய விமானப்படை 1971-ம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக எல்லையை தாண்டிச் சென்று தாக்குதலை நடத்தியுள்ளது.


புல்வாமா தாக்குதலில் பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டது…!


* இந்திய விமானப்படையின் 10 மிரேஜ் 2000 ரக விமானங்கள் எல்லையை தாண்டிசென்று தாக்குதலை நடத்தியுள்ளது.


* பலாகோட், சாகோட் மற்றும் முசாப்பராபாத்தில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்களில் விமானப்படை குண்டுகளை வீசியுள்ளது. இந்திய விமானப்படையின் தாக்குதலை அடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.


இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. இந்தியா எல்லையில் அத்துமீறியுள்ளது என பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து இந்தியாவிற்குள் அனுப்பி வருகிறது. இப்படி அவர்கள் பயங்கரவாதிகளை அனுப்பும் முகாம்களை இந்தியப் படைகள் அழித்துள்ளது. உரி பயங்கரவாத தாக்குதலின் போதும் இந்திய ராணுவம் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.