புல்வாமா தாக்குதலில் பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டது…!

Read Time:2 Minute, 36 Second

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டது என தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14–ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவு, மாநில போலீஸ், உளவுத்துறை மற்றும் ராணுவ உதவியுடன் விசாரித்து வருகிறது. விசாரணையில் முக்கிய தகவலாக பயங்கரவாதி பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்த காரில் மோட்டார் வாகன நிபுணர்கள் உதவியுடன் தடயவியல் சோதனை நடத்தியதில் அந்த காரின் சேசிஸ் மற்றும் என்ஜின் எண்களை வைத்து அது ‘மாருதி எகோ’ கார் என்று கண்டறியப்பட்டது.


* கார் முதலில் 2011–ம் ஆண்டு அனந்த்நாக்கை சேர்ந்த முகமது ஜலில் அகமது ஹக்னானி என்பவருக்கு விற்கப்பட்டுள்ளது.


* மாருதி எகோ காரின் சேசிஸ் எண் MA3ERLF1SOO183735, எஞ்ஜின் எண் G12BN164140 ஆகும்.


* கார் 7 பேருக்கு கைமாறியுள்ளது. கடைசியாக தெற்கு காஷ்மீர் பிஜ்பெஹரைனை சேர்ந்த சஜ்ஜத் பட் என்பவருக்கு விற்கப்பட்டுள்ளது.


சஜ்ஜத் பட்

* புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக பிப்ரவரி 4-ம் தேதி சஜ்ஜத் பட் வசம் சென்றுள்ளது.


* சஜ்ஜத் பட் சோபியான் சிராஜ் உல் உலூம் மாணவர் என தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.


தேசிய புலனாய்வு பிரிவு சஜ்ஜத் பட் வீட்டில் சோதனை நடத்தியபோது அவர் வீட்டில் இல்லை. சஜ்ஜத் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் இணைந்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் ஆயுதங்களுடன் உள்ள படமும் வெளியாகி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.