பயங்கரவாதிகளுக்கு ‘5 ஸ்டார் ரிசார்ட்’ இம்ரானின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானதே…!

Read Time:3 Minute, 38 Second

பயங்கரவாதிகளை பாதுகாக்க பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையே, இந்திய விமானப்படை வேலையை கச்சிதமாக முடிக்க பயனுள்ளதாக அமைந்தது.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பதில் தாக்குதல் நடத்தும் என அறிந்த பாகிஸ்தான் ராணுவம் 300-க்கும் மேற்பட்ட ஜெய்ஷ் பயங்கரவாதிகளை பாலாகோட்டிற்கு இடமாற்றம் செய்துள்ளது என இந்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகள், அவர்களுடைய பயிற்சியாளர்கள் என 300-க்கும் அதிகமானோரை பாலாகோட்டில் உள்ள மலையின் உச்சியில் மிகவும் ரம்மியமாக இயற்கை நிறைந்த 5 ஸ்டார் ரிசார்ட் போன்ற முகாமில் பாகிஸ்தான் ராணுவம் தங்க வைத்துள்ளது.

இது இந்திய விமானப்படை தாக்குதலை கச்சிதமாக முடித்து பயங்கரவாதிகளை தீர்க்க சிறப்பான வழியை செய்துள்ளது.

பாலாகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தியா தாக்குதல் நடத்தினாலும் எல்லையையொட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் தாக்குதல் நடத்தும் என கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பாலாகோட் பகுதிக்கு பயங்கரவாதிகளை கொண்டு சென்றுள்ளது. இதனை கண்டறிந்த இந்திய உளவுத்துறை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பை உடைத்து இந்திய விமானப்படை மூலம் அதிரடி காட்டியது, அந்நாட்டுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட போது பயங்கரவாத முகாமில்  இருந்த அனைவரும் தூக்கத்தில் இருந்தனர்.பயங்கரவாதிகளை காப்பதில் இம்ரான் கானில் ராஜதந்திரங்கள் அனைத்தும் இதில் வீணானது.

பயங்கரவாதிகள் முகாம்.

பயங்கரவாத முகாம் பாலாகோட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பாலாகோட்டில் ஜெய்ஷ் முகாம் தகர்க்கப்பட்டதன் புகைப்படம் வெளியாகியுள்ளது.


* பயங்கரவாதிகள் தங்கியிருந்த முகாமில் அதிகளவு வெடிப்பொருட்கள் இருந்தது என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.


* பயங்கரவாதிகள் இருந்த இடத்தில் 200-க்கும் அதிகமான ஏ.கே. 47 துப்பாக்கிகள் இருந்தது. கணக்கில் அடங்காத கையெறி குண்டுகள், வெடிப்பொருட்கள் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


* முகாமில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தேசியக் கொடிகள் வரையப்பட்டு இருந்தன.


* பயங்கரவாதிகள் மவுலானா அம்மார், மலானா தல்ஹா சாயிப் உள்ளிட்டோர் குறி வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.


பாலாகோட் முகாம் தகர்க்கப்பட்டது இந்திய விமானப்படையின் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஆப்கானிஸ்தானுக்கும் தலைவலி தரும் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.