அணுஆயுத பூச்சாண்டிக்கு பயப்படாது பாகிஸ்தானை கையாளும் விதத்தை மாற்றிய மோடி நிர்வாகம்

Read Time:6 Minute, 7 Second

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது செவ்வாய்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தது.

பாகிஸ்தானின் பாலாகோடில் விமானப்படையின் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் ஏராளமான பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் மற்றும் தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர். இந்த முகாமில் மட்டும் 200-300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் தாக்குதல் நடத்திவிட்டு எதுவும் தெரியாதது போன்று நடந்துக்கொள்வது ஒன்றும் பாகிஸ்தானுக்கு புதியது கிடையாது. மும்பை தாக்குதலில் இருந்து புல்வாமா தாக்குதல் வரையில் இதனைதான் செய்கிறது.

பிரதமர் மோடி.

இப்போது மோடி அரசு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடியை தூதரக ரீதியிலும், படை ரீதியிலும் அளித்து வருகிறது. 2016 செப்டம்பரில் உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தியதும் இந்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது. இப்போது இரண்டாவது முறையாக நடந்துள்ளது. இப்போது பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள அடி என்றும் மறக்கமுடியாத அடியாகும். இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் அணுஆயுதங்களை கொண்டது. பாகிஸ்தான் இந்தியாவை அணுஆயுத தாக்குதல் என்பது வெளிப்படையானது. இப்போது உங்களுடைய பூச்சாண்டிக்குயெல்லாம் பயப்பட மாட்டோம் என்பதை அதிரடி தாக்குதலால் மோடி நிர்வாகம் நிரூபித்துள்ளது.

பாகிஸ்தானில் பயங்கரவாதம் விவகாரத்தில் வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் அரசைக்காட்டிலும் மோடி நிர்வாகம் இருவழிபாதையை கச்சிதமாக பயன்படுத்தி வருகிறது.

இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று எல்லையை தாண்டி சென்று தாக்குதல் நடத்துவது என்பது 1971-க்கு பின்னர் இப்போதுதான் நடக்கிறது. 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றிப்பெற்றது. ஆனால் இந்திய விமானப்படையின் விமானங்கள் எல்லையைத் தாண்டக்கூடாது என வாஜ்பாய் உத்தரவிட்டுவிட்டார். பாகிஸ்தான் விவேகம்மற்றது, அணுஆயுத அச்சுறுத்தலில் ஈடுபடும் ஒரே அணுசக்தி நாடாகும் என்றெல்லாம் உலகநாடுகளை சேர்ந்த வல்லுநர்களின் எச்சரிக்கையாகும். இந்தியாவிற்கு எதிராக வெளிப்படையான மிரட்டல் போக்கையும் கொண்டது.

பயங்கரவாதிகள் முகாம்.

இந்தியா தாக்குதலை நடத்தாது என்ற மனப்போக்கில் இருந்த பாகிஸ்தானுக்கு சரியான அடியை இந்திய விமானப்படைகள் கொடுத்துள்ளது. இந்தியாவில் புதிய தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளை அழிக்க விமானப்படையை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாதிகளை கொண்டு இந்திய படைகளை தாக்கிய இரத்தத்தை சுமக்கும் பாகிஸ்தானின் வியூகமாக இருக்கும் பயங்கரவாத படையின் முக்கிய நம்பிக்கை அழிக்கப்பட்டது.

இந்திய அரசு தெளிவான செய்தியையும் வெளியிட்டுள்ளது “பயங்கரவாத முகாம்களின் செயல்பாடு தொடர்பாக தகவல் அளித்தும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அப்பணியை இந்திய விமானப்படை முடித்துள்ளது. மக்களுக்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது. சர்வதேச சட்டத்தின்படி பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் போரை தூண்டும் நோக்கம் எதுவும் கிடையாது,” என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இம்ரான் கான்.

புல்வாமா தாக்குதல் நடந்ததுமே உலக நாடுகளின் தூதர்களை அழைத்து இந்தியா விரிவாக எடுத்துரைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு முகமைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கி விரிவான திட்டத்தை முடிவு செய்து. பாகிஸ்தானுக்கு அதிரடியான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு அந்நாட்டு மக்களுக்காக எதுவும் செய்யாது இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது. இது பாகிஸ்தானின் தற்கொலைக்கு சமமான காரணமாகும். இதனை பெஷாவர் பள்ளி தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகள் புரியவைத்துள்ளனர். இப்போது பாகிஸ்தான் வசம் உள்ள வழி இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டியதுதான். மசூத் அசார் போன்ற “ஜிகாதிகளுக்கு” தீணி போட்டு அண்டைய நாடுகளுக்கு எதிராக போரிட வேண்டும் என்று நினைத்தால் இனிமேல் அதுநடக்காது, அடிமேல் அடி விழும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.