நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை… மலாலா வேண்டுகோள்

Read Time:2 Minute, 14 Second

நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் மாணவி மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ” யூனிசெஃபின் அமைதிக்கான தூதர் என்ற முறையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதால் எல்லையில் வசிக்கும் மக்கள் மீது அக்கறை கொண்டு நான் இதை கூறுகிறேன். அனைவருக்கும் போரின் கொடுமைகள் தெரியும்.

பழவாங்குவது நல்ல பதிலடி தாக்குதலாக ஒருபோதும் இருக்காது. போர் ஆரம்பித்துவிட்டால் அது அபூர்வமாகத்தான் முடியும்.

பல லட்சணக்கான மக்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை. தற்போது போரின் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை இந்த உலகம் கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும், இந்திய பிரதமர் மோடியும் கடினமான நேரங்களில் உண்மையான தலைமைப் பண்பை காண்பிக்க வேண்டும்.

இருவரும் அமர்த்து பேசி, கைகுலுக்கி பேச்சு வார்த்தை மூலம் தற்போதுள்ள மோதல் மற்றும் காஷ்மீர் பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிரிழப்புகளை தவிர்க்க இந்தியா – பாகிஸ்தான் பேச்சு வார்த்தையை சர்வதேச சமுகம்ஆதரிக்க வேண்டும். இரு நாடுகளின் குடிமக்களுக்கும் அவர்களது எதிரி பயங்கரவாதம், படிப்பறிவின்மை, ஏழமி என்று நன்கு தெரியும். இரு நாடுகளும் அல்ல,” என்று தெரிவித்துள்ளார்