பாகிஸ்தானின் 24 விமானங்களை கட்டம் கட்டிய 8 இந்திய விமானங்கள்…! அபிநந்தன் சிக்கியது எப்படி?

Read Time:5 Minute, 44 Second

இந்திய எல்லைக்குள் நுழைந்த 24 பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படையின் 8 விமானங்கள் வழிமறித்து அணிவகுப்பு செய்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக எல்லையில் இந்திய படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை அன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று அத்துமீறிய பாகிஸ்தான் விமானங்களை இந்தியப்படைகள் விரட்டியடித்தது.


இந்திய ஆவணங்கள் பாகிஸ்தானிடம் சிக்காதவாறு அழிக்க முயன்ற அபிநந்தன்…!


இருதரப்பு இடையே வான் பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய எல்லைக்கு காலையில் வந்துள்ளது. தாக்குதல் விமானம், அவைகளுக்கு உதவி செய்யும் வகையிலான விமானங்கள் என மொத்தம் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 24 விமானங்கள் வந்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படையில் இருந்து அமெரிக்க தயாரிப்பான எப்-17 விமானங்கள் 8, மிரேஜ்-3 விமானங்கள் 4, சீன தயாரிப்பான ஜெஎப் 17 தண்டர் விமானங்கள் 4 இதில் அடங்கும். பாகிஸ்தான் விமானப்படையின் அத்துமீறும் செயல் காலை 9:45 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லைக்கட்டுப்பாடு கோடை தாண்டி 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் வந்துவிட்டனர்.

மிரேஜ் 2000

பாகிஸ்தானின் எப் 17 போர் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளே வந்துள்ளது. அப்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான 8 விமானங்கள் வானில் மொத்தமாக அணிவகுத்து பாகிஸ்தானுக்கு எதிர்பார்க்காத அதிர்ச்சியை கொடுத்தது. சுகோய் 30எஸ் விமானங்கள் 8, மிரேஜ் 2000எஸ் அப்கிரேட் விமானங்கள் 2, மற்றும் மிக் 21 பிசோன் விமாங்கள் 2 என 8 விமானங்கள் வழிமறித்துள்ளது. ஏவுகணைகளுடன் தயார் நிலையில் இருந்த பாகிஸ்தான் விமானங்களை, அதே போன்ற பதிலடியை கொடுத்து விரட்ட இந்திய விமானப்படை தயார் படுத்தியது. ஏவுகணைகளை ஏவ தயாராக இருந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையை நோக்கி திரும்ப தொடங்கியது.

இதனால் இந்திய ராணுவ தளத்தின் மீது பாகிஸ்தான் விமானங்களிள் வைத்திருந்த ரேடார் தவறியது. இந்திய விமானப்படையும் பதிலடிக்கு தயாராகி அதிரடியை காட்டியது. அப்போது பாகிஸ்தான் ஜெட்கள் வேகமாக அந்நாட்டு எல்லைக்குள் சென்றது. இந்திய விமானப்படை ஏவிய ஏவுகணையொன்று பாகிஸ்தான் விமானப்படையின் எப் 17 விமானத்தை சிதறடித்தது. இந்திய விமானப்படை ஆர். 73 ஏவுகணையை பாகிஸ்தான் விமானம் மீது வீசியது. தாக்குதலுக்குள் சிக்கிய அவ்விமானம் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று விழுந்தது.

அபிநந்தன்.

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் அபிநந்தன் வேகமாக சென்ற போது அவருடைய ரேடாருக்குள் சிக்கிய விமானத்தின் மீது ஏவுகணையை வீசினார். பாகிஸ்தான் விமானிகள் பாராசூட் மூலமாக கீழே குதித்துவிட்டனர். பாகிஸ்தான் விமானத்தை அடிக்கவேண்டும் என்ற வேகத்தில் சென்ற அபிநந்தன், எச்சரிக்கையை கவனிக்க தவறிவிட்டார். பாகிஸ்தான் விமானப்படைகள் எண்ணிக்கை தொடர்பாக மற்ற விமானப்படை எச்சரிக்கை விடுத்தும், பாகிஸ்தான் விமானத்தை அடிக்க வேண்டும் என்ற வேகத்தில் அதனை செய்துமுடித்துவிட்டார்.

திரும்பும் நிலையில் பாகிஸ்தான் இரு ஏவுகணைகளை வீசியது. அதிலொன்று அபிநந்தன் சென்ற மிக்-27 பிசோன் விமானத்தை தாக்கியது.(பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய விமானங்கள் சிக்கவில்லை என இந்தியா தெரிவிக்கிறது) மற்றொரு ஏவுகணையில் இருந்து இந்திய விமானம் தப்பித்து இந்திய எல்லைக்குள் திரும்பியது. விமானத்தை தாக்கிய நிலையில் அபிநந்தன் பாராசூட் மூலமாக கீழே குதித்து உயிர்தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போதுதான் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டார் என தகவல்கள் தெரிவிப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.


இந்திய ஆவணங்கள் பாகிஸ்தானிடம் சிக்காதவாறு அழிக்க முயன்ற அபிநந்தன்…!