காடுகளிலிருந்து 11 லட்சம் பழங்குடிகளை வெளியேற்றும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பட்டாயின்றி காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்ற தடையென ஏற்கனவே பிறப்பித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மாநில அரசுகளால் பட்டா உள்ளிட்ட நில உரிமை மறுக்கப்பட்ட பிறகும், சட்ட விரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய காட்டுவாசிகளை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 13–ந்தேதி உத்தரவிட்டது. மேலும் இத்தகையோரை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறும் 21 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.


இந்திய காடுகளில் வெளியேற்றப்படும் 11 லட்சம் ஆதிவாசி மக்கள்…!


உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நாடு முழுவதும் சுமார் 11.80 பேர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது.

இது பழங்குடியினர் மற்றும் காட்டுவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அதிருப்தி வெளியிட்டு இருந்தன. மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என குற்றம் சாட்டியது. பழங்குடியினர் மற்றும் காட்டுவாசிகள் ஆர்வலர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காடுகளின் பாதுகாப்பு பெரும் இக்கட்டான நிலைக்கு செல்லும் எனவும், பழங்குடியினரின் உரிமையை மறுக்கும் செயல் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உச்சநீதிமன்றம்.

பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் 13-ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய காட்டுவாசிகள் (காட்டு உரிமைகளின் அங்கீகாரம்) சட்டம்–2006 ஒரு பயனுள்ள சட்டமாகும். காடுவாழ் மக்கள் மிகவும் ஏழைகள் மட்டுமின்றி கல்வியறிவற்றவர்கள் ஆவர். இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு கிடைக்கும் உரிமைகள் குறித்து அவர்கள் தெரிந்திருக்கவில்லை. எனவே அவர்களின் நன்மைக்காக இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறி இருந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டா இன்றி காடுகளில் வசித்து வரும் பழங்குடிகள் மற்றும் காட்டுவாசிகளை வெளியேற்ற தடை விதித்தது. மேலும், காடுகளில் எந்த அடிப்படையில் பழங்குடியினருக்கு நில உரிமை மறுக்கப்படுகிறது என்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக மாநிலங்கள் மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் உண்மையில் மேற்பார்வையிடுகிறார்களா? என்பதையும் தெரிவிக்கவும் உத்தரவிட்டது.

Next Post

இபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம்... 10 குறிப்புக்கள்

Fri Mar 1 , 2019
Share on Facebook Tweet it Pin it Share it Email இரட்டை இலை சின்னம் மற்றும் அஇஅதிமுக என்ற பெயர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணிக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் நடந்தவையை பார்க்கலாம்… 1) முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா […]

அதிகம் வாசிக்கப்பட்டவை