போலி பிரசாரம்..! இந்தியர்கள் கொடுத்த அடியில் வீடியோவை டெலிட் செய்த பாகிஸ்தான்…!

Read Time:4 Minute, 52 Second

சர்வதேச அழுத்தங்கள், இந்தியாவின் நெருக்கடிகள் ஆகியவற்றால் இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இதனையடுத்து நேற்று விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தியாவிடம் ஒப்படைக்கும் முன்னதாக அவரிடம் வீடியோவில் வாக்குமூலம் ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் பெற்றுள்ளது. இந்திய வீடியோவை நேற்று இரவு 8.30 மணிக்கு பாகிஸ்தான் அரசு உள்ளூர் ஊடங்களில் வெளியிட்டது. பாகிஸ்தான் அரசு டுவிட்டரிலும் வீடியோ வெளியானது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகுந்த நேர்த்தியாகவும், அவர்களின் நடத்தை நல்லவிதமாகவும் இருந்தது என அவர் குறிப்பிடும் வகையில் வீடியோ வெளியானது. வீடியோவில் அபிநந்தன் கட்டாயத்தின் பேரில் பேசினாரா, அல்லது அங்கு நடந்த சூழலை இயல்பாக தெரிவித்தாரா என்பது உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் பாகிஸ்தான் அரசு வெளியிட்டு வீடியோவில் ஏராளமான முறை கட்டிங் மற்றும் ஒட்டிங் செய்யப்பட்டுள்ளது. வெளிப்படையாக 17 இடங்களில் இந்த கட்டிங்-ஒட்டிங் செய்யப்பட்டுள்ளது என தெரிகிறது.

இதனை உன்னிப்பாக கவனித்த இந்தியர்கள் பாகிஸ்தானின் போலி பிரசாரத்தை தோலுரித்தனர். இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது, இதனை யாரும் நம்பவும் வேண்டாம், பகிரவும் வேண்டாம் என்று டுவிட்டரில் தகவல்களை பகிர்ந்தனர். பாகிஸ்தானின் வீடியோவிற்கு சரியான ரீடுவிட்டையும் கொடுத்தனர். “அபிநந்தன் கட்டாயத்தின் பெயரில் பேசியதாக தெரிகிறது, யாரும் பகிர வேண்டாம்,” என டுவிட்டர்களில் செய்தி பறந்தது.

பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது மற்றும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது தெரிவிந்துவிட்டது என உடனடியாக வீடியோவை பாகிஸ்தான் அரசு தன்னுடைய டுவிட்டரில் இருந்து டெலிட் செய்துவிட்டது. உங்க போலி பிரசாரம் எங்களிடம் எடுபடாது என டுவிட்டரில் இன்னும் நெட்டிசன்கள் பதிலடியை கொடுத்து வருகிறார்கள்.

அபிநந்தனிடம் வீடியோ வாக்குமூலம் பெற்றது பாகிஸ்தான் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.

இம்ரானுக்கு பாராட்டும், வி.கே. சிங் பதிலும்..

பாகிஸ்தான் இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்ததும் அவரை பாராட்டி டுவிட்டரில் தகவல்கள் பகிரப்பட்டது. பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜெனிவா உடன்படிக்கையின்படி அபிநந்தனை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்துதான் ஆகவேண்டும் என்பது உண்மையான விஷயம். சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக உடனடியாக பாகிஸ்தான் வெளியிட்டது. இப்போது வீடியோ எடிட்டிங் இம்ரான் கானாகிவிட்டார்…

இந்நிலையில் பாகிஸ்தான் சாதகம் செய்து விட்டதாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என மத்திய அமைச்சர் வி.கே. சிங் பதிலிட்டிருந்தார்.

மத்திய அமைச்சர் வி.கே.சிங் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “இந்திய விமானி அபிநந்தனை விடுவித்தால் பாகிஸ்தான் நமக்கு ஏதோ சாதகம் செய்து விட்டதாகப் புரிந்து கொள்ள வேண்டாம். ஜெனிவா உடன்படிக்கையின்படி, சேவையில் இருக்கும் ராணுவ வீரர் பிடிபட்டால் அவர்களுடைய சொந்த நாட்டிடம் ஒப்படைத்தாக வேண்டும். இப்படி 1971-க்குப் பிறகு பாகிஸ்தானை சேர்ந்த போர்க் கைதிகள் 90,000 வீரர்களை நாம் விடுவித்துள்ளோம் என்பதை நாம் மறக்கலாகாது,” என குறிப்பிட்டார்.