பாகிஸ்தான் அமைதியை விரும்பலாம், ஆனால் முதலில் பயங்கரவாதத்தை கொல்ல வேண்டும்!

Read Time:3 Minute, 5 Second

பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்ற இம்ரான் கானின் பேச்சு எவ்வளவு பொய் நிறைந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் அந்நாட்டின் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி, “மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்,” என்று கூறியுள்ளார். அமைதியை விரும்புகிறோம் என்றுகூறி இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதம் மூலமாக போரை தொடுக்கும் பாகிஸ்தான்; மும்பை, பதன்கோட், உரி தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாத இயக்கங்கள் மீது எந்தஒரு நடவடிக்கையும் எடுத்தது கிடையாது. 

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் 2001-ல் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டாலும், அவை இன்றளவும் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என்பது உலக நாடுகள் அறிந்தது. இந்தியாவின் மீது திசைத்திருப்பும் பாகிஸ்தான் மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளை இன்றும் நீதியின் முன் நிறுத்தவில்லை. அவர்களை கைது செய்வதாக கூறி விடுதலை செய்தது. பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தான் தொடர்பு தொடர்பாக ஆவணங்களை இந்தியா வழங்கியும் எதுவும் நடக்கவில்லை. 

புல்வாமா தாக்குதலின் போது ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கம் வெளிப்படையாக பொறுப்பு ஏற்றது. ஆனால் கண்டனம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்ட இம்ரான் கான் அப்பெயரை குறிப்பிடவில்லை. பயங்கரவாத செயல்பாடு தொடர்பாக உறுதியான தகவல் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்காத இம்ரான் கான் அமைதியை விரும்புவதிலும், அதை செயல்படுத்துவோம் என்பதில் எப்படி நம்பிக்கையிருக்கும். பொருளாதாரத்தில் பெரும் சரிவு; சர்வதேச நாடுகளிடம் இருந்து அழுத்தம்; வெளிநாட்டு நிதி நிறுத்தம் போன்ற பல்வேறு சங்கடமான நிலையில் இருக்கும் பாகிஸ்தான், உண்மையிலே அமைதியை விரும்பினால் பயங்கரவாதம் விவகாரத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் என பேதம் காட்டாமல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். 

பாகிஸ்தான் அமைதியை விரும்பினால், முதலில் உள்ளிருக்கும் பயங்கரவாதங்களை கொல்ல வேண்டும். புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா தரப்பில் உறுதியான ஆதரங்களை தந்தால் நடவடிக்கை எடுப்போம் என்ற கூற்றை முதலில் இம்ரான் கான் நிறைவேற்றுவாரா? என்பதை பார்ப்போம்…