அமெரிக்க தயரிப்பான எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் இந்திய விமானி அபிநந்தன்…!

Read Time:8 Minute, 8 Second

பாகிஸ்தானின் காவலில் இரு நாட்கள் இருந்து வெள்ளிக்கிழமை இந்தியா திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனை தேசம் கொண்டாடுகிறது. இந்திய விமானப்படைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற அவருடைய விருப்பம் விரைவில் நிறைவேற வேண்டும், வரவேற்கிறோம். எப்-16 விமானத்தை சுட்டு வீத்திய இந்திய விமானப்படையின் முதல் போர் விமானி அபிநந்தன் ஆவார். இந்த சாதனையை அடைய அவர் மிக்-21 விமானத்தில் சென்றுள்ளார். இந்திய எல்லைக்குள் காஷ்மீரில் பாகிஸ்தானின் விமான தாக்குதலை தடுக்க சரியான நேரத்தில் தலையிட்ட இந்திய விமானப்படை அணியின் ஒரு பகுதியாக வர்தமான் இருந்தார். பாகிஸ்தானின் எப் 16 என்ற ஒரு மதிப்பு வாய்ந்த விமானச் சொத்து அழிக்கப்பட்டுள்ளது. மேலும் எப். 16 விமானத்தில் இருந்த பைலட் கொல்லப்பட்டதாக ஊடக செய்தி தெரிவிக்கிறது. அது உண்மை என்றால், பாகிஸ்தான் விமானப்படைக்கு பெரும் இழப்பாக இருக்கும்.

இந்திய விமானப்படையில் உள்ள மிக்-21 பிசோன் விமானம் மேம்பட்ட மாறுபாட்டை கொண்டது, ஆனால் எப் 16 விமானத்திற்கு போட்டியானது கிடையாது. பல ஆண்டுகளாக போர் ஸ்க்ராடான்ஸின் (விமானப்படை பிரிவு) பற்றாக்குறை தொடர்பாக விமானப்படை அரசாங்கத்திடம் கவலையை தெரிவித்து வருகிறது. 100 போர் விமானங்கள் அவசரமாக தேவையென முன்மொழியப்பட்டு, ஒப்புதல் பெற வேண்டியது உள்ளது. இந்திய விமானப்படையில் உள்ள SU-30 MKIகள் 20 ஆண்டுகள் பழமையானவை, அவற்றை மேம்படுத்துவது அவசியமானது.

துரதிருஷ்டவசமாக, விமானப்படைக்கு விமானங்கள் வாங்கும் ஒவ்வொரு முறையும் சிக்கலான செயல்முறை மற்றும் அரசியல்மயமாக்கலால் அரசாங்கம் ஒரு முடிவை எடுப்பதில் தடையை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தான் மிகவும் பலவீனமான பொருளாதாரம் கொண்டாலும், அதை சிறப்பாக நிர்வகிக்கிறது. போர் இருக்காது என்ற நம்பிக்கையில் மெத்தனமாக இருக்க கூடாது. இருக்கும் விமானங்களை மேம்படுத்த ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தான பின்னர் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு பின்னர் தான் அது  நடக்கும். இதற்கிடையில் நாம் நம்மிடம் இருக்கும் விமானங்களை மற்றொரு 10 ஆண்டுகளுக்கு பராமரித்து நிர்வகிக்க வேண்டும்.ஆனால் அரசாங்கம் இந்த நடவடிக்கையை ஒவ்வொரு ஆண்டும் தடுக்கிறது, நம்முடைய நவீனமயமாக்கல் திட்டத்தை தாமதப்படுத்துகிறது, இதுவும் நேரடியான பொறுப்பாகும். சில நேரங்களில், பட்ஜெட்டில் விமானப்படை நவீனமயமாக்கலுக்கு ஒதுக்கப்பட்ட கணிசமான பகுதி செலவு செய்யப்படுவது கிடையாது. இப்போது நாம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விளையாடும் நேரம் கிடையாது. இப்போது நம்மிடம் உள்ள சொத்துகள் மற்றும் செயல் திட்டங்களில் நம்பிக்கையை வைக்க வேண்டும்.

எல்லையில் புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல் சண்டையின் போது எப் 16 விமானங்களை போன்று ஏவுகணைகளை தாங்கி தாக்குதல் அழிக்கும் திறனை மிக்21 பிசோன் விமானமும் கொண்டிருந்தது. எப் 16 விமானத்துடன் ஒப்பிடும் போது பிசோன் விமானம் குறைந்த சமாளிக்கும் திறன் கொண்டது. மிக் 21 பிசோன் விமானிகள்,மிரேஜ்-2000 -க்கு எதிராக பயிற்சி போரில் ஈடுபடுகின்றன, அவ்வப்போது சோதனையும் செய்யப்படுகிறது. இந்திய விமானப்படையில் தாக்குதல் நடத்தும் பிரிவில் உள்ள மிக் 21 பிசோன் விமானிகள் மிகவும் திறன்மிக்க பயிற்சியை பெற்றவர்கள்.சில சந்தர்ப்பங்களில் நட்பு வெளிநாட்டு விமானப் படைகளின் எப் 16 விமானங்களுக்கும் எதிராக போர் பயிற்சியை பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

கூடுதலாக, விமானப்படை பயிற்சிக்கு தந்திரோபாய பயிற்சி மற்றும் விமான ஏவுகணை அபிவிருத்தி நிறுவகம் (TACDE) போன்ற தொழில்முறை பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. படைப்பிரிவில் உள்ள வீரர்களின் திறமை ஆண்டு தோறும் மதிப்பிடப்பட்டு தேவையான, திருத்தமான நடவடிக்கைகள் உறுதியாக செயல்படுத்தப்படுகின்றன.

நடவடிக்கையின் போது தளபதி தன்னுடைய பொறுப்பு மற்றும் இருக்கும் படைப்பலத்தை கொண்டு மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்கள் பயிற்சி செய்ய வேண்டும். வான் பாதுகாப்பில் பொதுவாக SU-30 MKI, மிக்-29, மிரேஜ்-2000, மிரேஜ் 21 பைசன் விமானங்கள் கலந்து கொள்ளும். வேகமாக வளர்ந்த வான்வெளி சூழ்நிலையில் இவைகள் ஒருங்கிணைந்த முறையில் போரிடுகின்றனர் மற்றும் பிற விமானங்களையும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்தது. பாகிஸ்தான் விமானப்படையிலும் குறைந்த எண்ணிக்கையில்தான் எப் 16 விமானங்கள் உள்ளது. வான்படை போர்களில் வழக்கமாக தீவிரம் இருக்கும், சில நிமிடங்களில் விஷயம் முடிந்துவிடும். படைகள் பிரிந்த விநாடிகளில் தான் முடிவுகள் செய்யப்படுகின்றன.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி மிகவும் கடினமான பகுதியாகும், வான்பகுதியை தவிர்த்து தரையிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லையிலும் எளிதான வேறுபாடு காணமுடியாது. எதிரி விமானங்கள் துரத்தும்போது எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியை கவனமுடன் கடப்பது கடினம். ஒரு போர் விமானி தனது இலக்கை நோக்கி தனது கண்களை அமைத்துவிட்டால், அதிலிருந்து வெளியே வரமுடியாது. அபிநந்தனின் விமானத்தைத் தாக்கியது பற்றி இன்னமும் எங்களுக்குத் தெரியாது. அது நிலத்தில் விழுந்ததா? வான்பகுதியில் விமானத்தால் ஏவப்பட்ட அல்லது வானைநோக்கி ஏவப்பட்ட ஏவுகணையா? என்பது தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தான் 120 ஏவுகணையை ஏவியதற்கான ஆதாரங்களை இந்தியா கொண்டுள்ளது. இது இந்திய விமானப்படை விமானத்தை இலக்காக கொண்டு ஏவப்பட்டு இருக்கலாம். இப்போது விமானி அபிநந்தன் திரும்பிவிட்டார், இந்திய விமானப்படை அவரிடம் விவரங்களைப் பற்றிக் கலந்துரையாடும்.

பார்வையாளர்களாகவும், குடிமக்களாகவும், பொறுமையுடனும் அரசாங்கத்துடனும் ராணுவத்துடனும் அவர்கள் செய்வதில் நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். பொதுமக்களிடம் எப்போதுமே கருத்து இருக்கும். அது எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும், சுமைகளை எதிர்க்கொள்பவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்க கூடாது.

ஏர் மார்ஷல் எஸ்.கிருஷ்ணசாமி …