தேசப்பற்று பற்றி நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்…

Read Time:3 Minute, 3 Second

பயங்கரவாத தாக்குதலை முன்வைத்து வாங்கு வங்கி அரசியலை மேற்கொள்பவர்கள் யாரென்று பாருங்கள்…! பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் பா.ஜனதாவினர் பிரிவினைவாத மற்றும் எதிர்மறை அரசியலின் மோசமான ஆதரவாளர்கள். தேசப்பக்தி தொடர்பான உங்களுடைய பாடத்தை நாங்கள் கேட்கமாட்டோம். இந்தியப் படைகள் இந்திய தேசத்திற்கு சொந்தமானதே தவிர பிரதமர் மோடி பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் அவர்களுடைய கட்சிக்கு சொந்தமானது கிடையாது.

சுதந்திர போராட்டத்தின் போது ஒளிந்துக்கொண்ட பா.ஜனதாவிற்கு தேசப்பற்று தொடர்பாக சான்றிதழ் கொடுக்க எந்தஒரு உரிமையும் கிடையாது. சுதந்திர போராட்டின் போது காக்கி அணிந்துள்ளவர்கள் அனைவரும் ஓடி ஒளிந்து கொண்டார்கள். இப்போது அவர்கள் தேசப்பற்று தொடர்பாக சான்றிதழ் வழங்குகிறார்கள். மூன்று முறை கர்நாடக மாநில பா.ஜனதா முதல்வராக இருந்தவரும், பா.ஜனதாவின் தலைவராக உள்ளவருமான எடியூரப்பா, “எல்லைத் தாண்டிய இந்தியப் படையின் தாக்குதல் பா.ஜனதா கர்நாடகாவில் 22 தொகுதிகளில் வெற்றிப்பெற உதவும்” என்று பேசுகிறார்.

மோடி-ஷா மற்றும் நண்பர்கள் தேசப்பற்று பற்றி விரிவுரையை கொடுக்கிறார்கள்! அனைவரும் இதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கள் துணிச்சலான ஆயுதப்படைகள் வெட்கமின்றி அரசியல்மயமாக்கப்படுகிறது. பாகிஸ்தானில் விமானப்படைகள் தாக்குதல் நடத்திய பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் டஜன் கணக்கான தொலைக்காட்சிகள் செய்தியை பரப்புகிறது. ஒன்றை கேட்க விரும்புகிறேன். போலி செய்திக்கு வேண்டுமென்று தீனிபோடும் மோடி அரசின் உன்னதமான மந்திரி யார்? இந்திய விமானப்படை உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்பாக எந்தஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.

பா.ஜனதாவின் எம்.பி.யும் டெல்லியில் பா.ஜனதா தலைவருமான மனோஜ் திவாரி, இந்திய விமானப்படையின் சீருடையை அணிந்துக்கொண்டு வாக்கு கேட்கிறார். மொத்தத்தில் நம்முடைய ராணுவ வீரர்களை பா.ஜனதா, மோடி, அமித்ஷா அவமதிக்கின்றனர்.

– தெரிக் ஒ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.)