தமிழகத்தில் 20 தொகுதிகளில் வெற்றி புதிய வாக்காளர்கள் கையில்…!

Read Time:3 Minute, 45 Second

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 29 மாநிலங்களில் 282 இடங்களில் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் முக்கிய பங்கை வகிக்கவுள்ளனர். 2014-ம் ஆண்டில் இந்த இடங்களில் வெற்றிப்பெற்ற வேட்பாளரின் வெற்றி வாக்குவிகிதத்தைவிட புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 1997 மற்றும் 2001-க்கு இடையில் பிறந்த இந்த வாக்காளர்கள் கடந்த பொதுத் தேர்தல்களில் வாக்களிக்க தகுதிப்பெறவில்லை. தேர்தல் ஆணையத்தின் தரவுகள்படி ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியிலும் சராசரியாக 1.49 லட்சம் முதல் முறையாக வாக்காளர்கள் இருக்கிறார்கள். 2014 தேர்தலில் 297 இடங்களில் வெற்றி விகிதத்தைவிட இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

இந்த வாக்காளர்களில் சிலர் 2014 தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கலாம். ஆனால் அவர்கள் வாக்களிக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். தேர்தலில் 1997 மற்றும் 2001-க்கு இடையில் பிறந்த 8.1 கோடி முதல் முறையாக வாக்காளர்களை பார்க்கிறது. இந்த தேர்தலில் அவர்களுடைய அபிலாஷைகளுக்கு கட்சிகள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பது ஒரு முக்கிய கேள்வியாகும்.

282 தொகுதிகளில் 217 தொகுதிகள் 12 பெரிய மாநிலங்களில் உள்ளது. மேற்கு வங்காளம் (32 இடங்கள்). பீகார் (29), உ.பி. (24), கர்நாடகா (20), தமிழ்நாடு (20), ராஜஸ்தான் (17), கேரளா (17), ஜார்கண்ட் (13), ஆந்திரப் பிரதேசம் (12), மராட்டியம் (12), மத்திய பிரதேசம் (11), அசாம் (10) ஆகிய மாநிலங்களில் 2014 முதல் புதிய மாநில வாக்காளர்கள் கடந்த பொதுத் தேர்தல்.

2014 -ம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் வெற்றி வாக்குவிகிதம் சராசரியாக 1.86 லட்சமாக இருந்து உள்ளது. இப்போது தகுதிப்பெற்றுள்ள புதிய வாக்காளர்களின் சராசரி எண்ணிக்கை (1.15 லட்சம்) சற்றே அதிகமானது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் இப்போது பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இங்கு கடந்த முறை பா.ஜனதா கூட்டணி 71 தொகுதிகள் வரையில் வென்றது. இப்போது மத்தியில் மெஜாரிட்டியாக உள்ள பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தேர்தலை எதிர்க்கொள்கிறது, இதிலும் புதிய வாக்காளர்களின் பங்கு முக்கியம் பெறும்.

தமிழகத்தில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடைபெற உள்ள முக்கிய தேர்தலாக 2019 நாடாளுமன்றத் தேர்தல் உள்ளது. அதிமுக, திமுக தலைமையில் இரு கூட்டணிகள் போட்டியிட உள்ளது. 39 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் 20 தொகுதிகளில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலில் இருந்த வெற்றி விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது. தமிழக தேர்தலில் புதிய வாக்காளர்களின் தாக்கம் முக்கிய பங்கை வகிக்கும் என்றே பார்க்கப்படுகிறது.