அபிநந்தனின் ஹாண்டல் பார் ‘ஸ்டைல்’ மீசையை கொண்டாடும் இந்தியர்கள்…!

Read Time:2 Minute, 32 Second

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் ஹாண்டல் பார் மீசை இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆகியுள்ளது.

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து திரும்பிய போது இந்தியாவே கொண்டாடியது. முன்னதாக அவரை விடுவிக்க வேண்டும் என்ற இந்தியர்களின் முழக்கம் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தது. இந்தியா திரும்பிய பின்னர் அவருடைய வண்டியின் ஹாண்டல் பார் ஸ்டைலிலான மீசையும் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் இளைஞர்கள் அவரைப்போன்று மீசையை வைத்துக் கொள்கிறார்கள், அதனை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

பெங்களூருவில் உள்ள ஒரு சலூன் கடைக்காரர் அபிநந்தன் மீசை பிரபலமான பின்பு தன் வாடிக்கையாளர்கள் அபிநந்தன் மீசை வைக்க விரும்பினால் அவர்களிடம் அதற்காக பணம வாங்குவதில்லை என அறிவித்தார். இதனையடுத்து அவரிடம் சுமார் 650 பேர் அபிநந்தனின் மீசையை போன்று தங்களுடைய மீசையை மாற்றிக்கொண்டனர். இதேபோன்று பல சலூன் கடைகளில் வாடிக்கையாளர்கள் அபிநந்தன் ஸ்டைல் மீசையை மிகவும் ஆர்வமுடன் வைத்து கொள்கின்றனர். சில கடை உரிமையாளர்கள் 50% சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அபிநந்தன் போன்று மீசை வைத்து விடுகின்றனர்.

வட இந்தியாவை சேர்ந்த பலரும் அபிநந்தன் ஸ்டைலில் மீசையை வைத்து அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சிலர், அபிநந்தன் வைத்திருக்கும் மீசையை போல வளர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர்.


இந்தியாவில் பல குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அபிநந்தன் என்ற பெயரை பெற்றோர்கள் சூட்டியுள்ளனர்.

அபிநந்தன் ஸ்டைல் மீசையை வரைந்து பெண்களும் டுவிட்டரில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்தியா முழுவதும் அபிநந்தனும், அவருடைய ஸ்டைல் மீசையும் பிரபலமாகியுள்ளது.