80% குண்டுகள் துல்லியமாக இலக்கை தாக்கியது – இந்திய விமானப்படை

Read Time:2 Minute, 4 Second

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களில் இந்திய விமானப்படை வீசிய குண்டுகளில் 80% சரியாக இலக்கை தாக்கியது என விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் தாக்குதலில் பாலக்கோட் பயங்கரவாத முகாம் தகர்க்கப்பட்டதா? என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுகிறது.இந்தியாவின் தாக்குதல் தொடர்பாக செய்திகளை வெளியிடும் சர்வதேச மீடியாக்கள், இலக்கு சரியாக தாக்கப்பட்டதா? என கேள்வி எழுப்புகிறது. செய்தியாளர்களால் இந்திய விமானப்படை தாக்கிய முகாம் பகுதிக்கு செல்ல முடியவில்லை. சேதம் தொடர்பாக இந்திய அரசியல் கட்சிகளும் கேள்வியை எழுப்புகிறது.

ஜெய்ஷ் மதப்பள்ளியில் எந்தஒரு சேதமும் ஏற்படவில்லை என்றே சேட்டிலைட் புகைப்படத்தை குறிப்பிட்டு ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.


பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் ‘சேட்டிலைட் புகைப்படம்’


இந்நிலையில் இந்திய விமானப்படை தரப்பு தகவல்கள் இதனை நிராகரிக்கும் வகையில் உள்ளது. இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை குறிவைத்து வீசிய குண்டுகளில் 80 சதவிதம் சரியாக இலக்கை தாக்கியது. இதுதொடர்பான ஆவணங்கள், மிகவும் துல்லியமான 12 சேட்டிலைட் புகைப்படங்களை அரசிடம் இந்திய விமானப்படை சமர்பித்துள்ளது. கட்டிடத்தின் மேற்பகுதியை துளைத்துக்கொண்டு உள்ளே வெடித்தது, சேதத்தை ஏற்படுத்தியது என ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என விமானப்படை தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.