ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா போராடி தோல்வி

Read Time:1 Minute, 33 Second

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா போராடி தோல்வி அடைந்தது.

இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் 3 வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நடந்தது. ‘ஹாட்ரிக்’ வெற்றியோடு இந்தியா தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் பின்னி எடுத்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது. 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரர்களில் கோலி தவிர்த்து பிற வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

விராட் கோலி 41 ஒருநாள் சதத்தை (123 ரன்கள், அவுட்) விளாசினார். பின்வரிசையில் இறங்கிய வீரர்கள் போராடியும் பலன் அளிக்கவில்லை. 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா 281 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. விராட் கோலியின் சதம் வீணானது.