ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் மிக் 21 விமானம் விபத்தில் சிக்கியது

Read Time:1 Minute, 16 Second

பிகானரின் சோபா சார் கி தானி பகுதியில் இந்திய விமானப்படையின் மிக் 21 விமானம் விபத்தில் சிக்கியது

ராஜஸ்தானின் நால் பகுதியில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக விமானம் சென்ற போது விபத்து நேரிட்டது. அதிலிருந்த விமானி வெளியேறி பாராசூட் மூலமாக பத்திரமாக தப்பிவிட்டார். விமானத்தின் மீது பறவை மோதியதால் விபத்து நேரிட்டதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. விபத்துக்கான காரணம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 27-ம் தேதி பாகிஸ்தான் விமானங்களை விரட்டிய போது மிக் 21 பிசோன் விமானம் மூலம்தான் அபிநந்தன், பாகிஸ்தானின் எப் 16 விமனத்தை சுட்டு வீழ்த்தினார்.

மிக் ரக விமானங்கள் அதிகமான விபத்துக்களை சந்தித்து வருகிறது என கடும் விமர்சனங்கள் இருக்கிறது.