“பாகிஸ்தானில் 3 முறை தாக்குதல், கடைசி தாக்குதல் பற்றி வெளியே சொல்ல மாட்டேன்” ராஜ்நாத் சிங்

Read Time:2 Minute, 7 Second

பாகிஸ்தானில் மூன்றாவது முறையும் நமது வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் இனி பயங்கரவாதிகளை பயன்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்திய படைகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லையில் பாதுகாப்பு படைகள் முழு விழிப்புடனே வைக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் பயங்கரவாதிகளை அழிக்கும் வகையில் இந்திய ராணுவம் எல்லைத் தாண்டி சென்று தாக்குதல் நடத்தி வருகிறது. 2016 உரி தாக்குதலுக்கு பின்னரும், புல்வாமா தாக்குதலுக்கு பின்னரும் இந்திய படைகள் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி 3 முறை பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், கடந்த 5 ஆண்டுகளில் மூன்று முறை எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பயங்கரவாத முகாம்களை வெற்றிகரமாக தகர்த்துள்ளனர். உரி தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். அதுபோலவே புல்வாமா தாக்குதலை தொடர்ந்தும் நமது ராணுவ வீரர்கள் சரியான முறையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு பதிலடியை கொடுத்தது. ஆனால் மூன்றாவது முறையும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆனால் அதை பற்றி நான் வெளியே சொல்ல மாட்டேன்’’ எனக் கூறினார்.