நிரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா வெடிவைத்து தகர்ப்பு

Read Time:1 Minute, 47 Second

மராட்டியத்தில் நிரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு ராய்கட் கிஹிம் கடற்கரைக்கு மிக நெருங்கிய பகுதியில் சொகுசு பங்களா இருந்தது.
கடற்கரையை ஒட்டி 33,000 சதுர அடியில் கட்டிய பங்களா, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிமுறைகளை மீறியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து உயர்நீதிமன்ற விசாரணையில் கட்டிடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து பங்களாவை நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் வெடிவைத்து தகர்த்துள்ளது. முன்னதாக அங்கிருந்து வெடிக்கும் வகையிலான பொருட்கள் அகற்றப்பட்டது.

பங்களா மிகவும் வலிமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது, அதனை அதிநவீன இயந்திரங்களை வைத்து இடித்தாலும் மாதங்கள் எடுக்கும். எனவே, வேலையை துரிதமாக முடிக்கவே உள்வெடிப்புமுறையை பயன்படுத்தி கட்டிடத்தை தகர்த்தோம், விரைவில் இடிபாடுகள் அகற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டு தப்பிவிட்டனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.


லண்டனில் சொகுசாக சுற்றும் நிரவ் மோடி…!