மகளிர் தினத்தில் அனைவரது மனதையும் கொள்ளைக்கொண்டுள்ளார் சச்சின் தெண்டுல்கர்…!

Read Time:2 Minute, 55 Second

மகளிர் தினத்தில் அனைவரது மனதையும் கொள்ளைக்கொண்டுள்ளார் சச்சின் தெண்டுல்கர்.

கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ரசிகர்களை கட்டிப்போடும் சச்சின், இந்த மகளிர் தினத்தில் சமையல் அறைக்கு சென்று அசத்தியுள்ளார்.

நேற்று அவர் டுவிட்டரில் பதிவிட்ட செய்தில் “இன்று சர்வதேச மகளிர் தினம், இன்று நம்முடைய வாழ்வில் உள்ள பெண்களுக்கு சிறப்பான ஒன்றை செய்ய வேண்டும். என்னுடன் சேர்ந்துக்கொள்ளுங்கள், #SeeHerSmile ஹேஷ்டெக்கை பயன்படுத்தி உங்களுடைய இனிப்பான அன்பை பகிர்ந்துக்கொள்ளுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.

நம்முடைய வாழ்நாளில் நேரம் காலம் பார்க்காமல் நமக்கு சமைத்து கொடுத்த அம்மாவிற்கு நாம் ஒரு முறையாவது சமைத்து கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டு சச்சின் தன்னுடைய அம்மாவிற்காக சமையல் செய்துள்ளார்.

‘பைங்கண் பார்த்தா’ என்ற டிஷை சமைக்கப்போகிறேன். என்னுடைய அம்மா, அஞ்சலி மற்றும் சாரா ஆகிய மூவருக்கும் சமர்ப்பிக்கிறேன். முதலில் என்னுடைய அம்மாவிற்குதான் கொடுப்பேன்ன் எனக்கூறி சமையலை தொடங்குகிறார். தேவையான காய்களை வெடிக்கொள்ளும் அவர் கையை வெட்டிக்கொண்டதாக சிறு வேடிக்கையையும் கொடுக்கிறார். நான் செய்து முடித்ததும் என் அம்மா ருசி பார்த்த பிறகே மனைவியும், மகளும் பார்ப்பார்கள் என்று கூறுகிறார்.

சமையல் முடிந்ததும் ‘ருசி’ பார்த்துவிட்டு அவருடைய அம்மாவிடம் கொடுக்கிறார்.

“உங்களுக்காக இந்த டிஷை சமைத்துள்ளேன், ருசியாக உள்ளதா?” என கேள்வியை மராத்தியில் சச்சின் கேட்கிறார். அதற்கு அவருடைய தாயார் மிகவும் நன்றாக இருக்கிறது என்கிறார். இறுதியில் அம்மா சச்சின் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்து பாராட்டிய பிறகு சச்சின் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். அப்போது “அம்மாக்கள் எப்போதும் நாம் முயற்சியில் தோல்வியடைந்தால் சொல்ல மாட்டார்கள்,” என்று கூறுகிறார்.

அவருடைய இந்த வீடியோவை பலரும் பாராட்டி சேர் செய்து வருகிறார்கள்.