நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ல் பொது (இடை) தேர்தல்!

Read Time:2 Minute, 31 Second

2019 நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிப்பதற்காக பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அசோக் லாவசா, சுஷில் சந்திரா ஆகியோர்  தேர்தல் தேதியை அறிவித்தனர். 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

  1. ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
  2. ஏப்ரல் 18-ம் தேதி இரண்டாம் கட்டத்தேர்தலும்.
  3. ஏப்ரல் 23-ம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தலும்.
  4. ஏப்ரல் 29-ம் தேதி நான்காம் கட்டத் தேர்தலும்.
  5. மே 6-ம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தலும்.
  6. மே 12-ம் தேதி ஆறாம் கட்டத் தேர்தலும்.
  7. மே 19-ம் தேதி ஏழாம் கட்டத் தேர்தலும் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 21 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், அரியான, இமாச்சல் பிரதேசம், கேரளா, மேகலாயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம்,  உத்தரகாண்ட், அந்தமான், தாதர் நாகர் காவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு, புதுடெல்லி, புதுச்சேரி, சண்டிகார் ஆகிய 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

தேர்தலில் 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இங்கு வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதிசெய்துகொள்வதற்காக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு எந்திரமும் இணைக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின்னர் நடப்பது என்ன?