எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானம் விழுந்து விபத்து,157 பேர் உயிரிழப்பு

Read Time:1 Minute, 28 Second

எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானம் விழுந்து விபத்து நேரிட்டதில் 157 பேர் உயிரிழந்தனர்.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. உள்ளூர் நேரப்படி 8.38 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது, ரேடாரிலிருந்து மறைந்தது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்புத்துறை தரப்பில் தேடும் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கியது.

இதற்கிடையே விமானம் விபத்துக்குள் சிக்கியது என ஏர்லைன்ஸ் நிர்வாகம் மற்றும் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் உறுதி செய்தது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 149 பயணிகள் மற்றும் பணியாளர்கள் 8 பேர் என மொத்தம் 157 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். விமானத்தில் 33 நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்து உள்ளனர் என தெரியவந்துள்ளது. விமானம் புறப்பட்டதும் செங்குத்தாக, வேகமாக நிலையற்றதன்மையில் பயணித்ததாக தரவுகள் தெரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.