தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின்னர் நடப்பது என்ன?

Read Time:7 Minute, 44 Second

மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிப்பதற்காக தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறதுவாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்கள், தேர்தல் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் என அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என பார்க்கப்படுகிறது. சிக்கிம், ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களும் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்:-

நடத்தை விதிகள் என்றால் என்ன?

தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் என்பது தேர்தல்களுக்கு முன்னதாக அரசியல் கட்சிகளையும், வேட்பாளர்களையும் கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறையாகும். தேர்தல் விதிகள், வாக்குப்பதிவு தினம், வாக்குச் சாவடிக்கள், அமைச்சர்கள்ஊர்வலம், பிரசாரம் தேர்தல் அறிக்கைகள், பொது நடத்தை உள்ளடக்கம் போன்ற விதிகளை கருத்தில் கொண்டிருக்கும். இதனால்தான் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

எப்போது அமலுக்கு வரும்?

பத்திரிகையாளர் தகவல் ஆணையத்தின்படி தேர்தல் நடத்தை விதிகள் 1960-ம் ஆண்டு கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1962 தேர்தலில் அனைத்து கட்சிகளும் பின்பற்றியது. இதனைத் தொடர்ந்து அனைத்து பொதுத் தேர்தல்களிலும் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகிறது. அக்டோபர் 1979-ல் தேர்தல் ஆணையம் இதில்அதிகாரத்தில் உள்ள கட்சியைகட்டுப்படுத்த ஒரு பிரிவை சேர்த்தது. இது தேர்தல்களின் போது ஆளும் கட்சி ஒரு நியாயமற்ற முறையில் அரசியல் லாபம் பெறுவதை தடுக்கிறது.

 தேர்தல் கால அட்டவணை அறிவிக்கப்படும் தேதி முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் தேதி வரையில் விதிகள் அமலில் இருக்கும். 2019 தேர்தலுக்கு இன்றுடன் அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் முடிவடையும்வரை நடைமுறையில் இருக்கும்.

என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் உள்ளன?

தேர்தல் நடத்தை விதிகள் பொது ஒழுங்கு, கூட்டங்கள், ஊர்வலம், வாக்குப்பதிவு நாள், வாக்குச் சாவடிக்கள், பார்வையாளர்கள், அதிகாரத்தில் உள்ள கட்சி மற்றும் தேர்தல் அறிக்கைகள் ஆகிய 8 விதிகளை கொண்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததும் மத்திய மற்றும் மாநிலங்களில் உள்ள அரசுக்கள், அதிகாரப்பூர்வமாக பிரச்சாரம் மேற்கொள்ள அதனுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்

வாக்களிக்கும் மக்கள் மத்தியில்  தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தஒரு கொள்கை மற்றும் திட்டத்தை அறிவிக்க கூடாது.

கட்சிகள் பொதுச் செலவினத்தின் கீழ் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் அல்லது தேர்தல்களில் வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக சாதனைகளைப் பிரகடனப்படுத்த விளம்பரத்திற்காக வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்த கூடாது. ஆளும் கட்சி பிரச்சாரத்திற்காக அரசாங்க போக்குவரத்து அல்லது இயந்திரங்கள் பயன்படுத்த முடியாது. இதனை பிரசாரம் செய்யும் மைதானம் விவகாரத்தில் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் கூட்டங்கள் நடத்துவதற்கு, ஹெலிபேடுகளை பயன்படுத்துவது போன்ற வசதிகளுக்கு அதிகாரத்தில் உள்ள கட்சிக்குள்ள விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் எதிர்க்கும் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன.

பத்திரிகைகள் மற்றும் பிற ஊடகங்களில் பொதுச் செலவினங்களுக்கான செலவில் விளம்பரம் செய்வது குற்றமாக கருதப்படுகிறது. அரசு நிர்வாகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நியமனம்மாற்றத்தை அரசு செய்யமுடியாது. இது வாக்காளர்களை பாதிக்கும். அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் பணியின் அடிப்படையில் மட்டுமே விமர்சிக்கப்பட முடியும் மற்றும் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் ஜாதி, வகுப்புவாத உணர்வுகளை பயன்படுத்த முடியாது

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது பிற வழிபாட்டு செய்யும் இடங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், மிரட்டுதல் அல்லது ஆள்மாறாட்டம் செய்தல் ஆகியவற்றை தடை செய்யலாம்வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்னதாக பிரசாரத்தை நிறுத்த வேண்டும். இது வாக்காளர்களுக்கு தங்கள் வாக்கை பதிவு செய்வதற்கு முன்னதாக  ஒரு பிரச்சாரமில்லா மற்றும் அமைதியான சூழலை வாக்களிக்க அளிக்கிறது

தண்டனை எப்படி?

தேர்தல் நடத்தை விதிகள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையத்தின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது. இவ்விவகாரத்தில் பிரதான அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இது சட்டப்பூர்வ ஆதரவு கிடையாதுதேர்தல் நடத்தை விதியை மீறியதாக நீதிமன்றம் செல்ல வழி கிடையாது. இந்த விதிகள் தன்னார்வமாக உள்ளது

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் கட்சிகள், வேட்பாளர்களுக்கு புகாரின் அடிப்படையில் நோட்டீஸ் விடுக்கலாம். ஒருமுறை நோட்டீஸ் விடுக்கப்பட்டதும்  வேட்பாளர் அல்லது கட்சி எழுத்துப்பூர்வமாக பதில் கூற வேண்டும். தவறுகளை ஏற்றுக்கொண்டால் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரலாம் அல்லது குற்றச்சாட்டுகளை மறுக்கலாம். குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், பள்ளியில் கையில் சிறிய கம்பை கொண்டு அடிப்பது போன்றுதான் தண்டனை இருக்கும்

விதிகளை மீறினால் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக தடையை பிறப்பிக்கலாம், மன்னிப்பு கோரியதும் தடை நீக்கப்படும்