2019 நாடாளுமன்றத் தேர்தல்: மாநிலங்கள் வாரியாக தேர்தல் கட்டங்கள் – தேதிகள் முழு விபரம்

Read Time:6 Minute, 8 Second

16-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, 17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 90 கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் 7 கட்ட தேர்தல் முடிவடைந்ததும், மே மாதம் 23-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 18-ம் தேதி (வியாழக் கிழமை) ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – மார்ச் 19
மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – மார்ச் 26
மனுக்கள் மீது பரிசீலனை – மார்ச் 27
மனுவை வாபஸ் பெற கடைசி நாள்- மார்ச் 29
வாக்குப்பதிவு – ஏப்ரல் 18
ஓட்டு எண்ணிக்கை – மே 23

மாநிலங்கள் வாரியாக எப்போது, எத்தனை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது என்பது தொடர்பான விபரம்:-

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி

நாடு முழுவதும் 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் நடைபெறுகிறது. ஆந்திரா – 25 தொகுதிகள், அருணாச்சல பிரதேசம் – 2 தொகுதிகள், பீகார் – 4 தொகுதிகள், அசாம் – 5 தொகுதிகள், சத்திஷ்கார் -1 தொகுதி, ஜம்மு காஷ்மீர்- 2 தொகுதிகள், மராட்டியம் – 7 தொகுதிகள், மணிப்பூர் -1 தொகுதி, மேகாலயா -2 தொகுதி, மிசோரம் -1 தொகுதி, நாகலாந்து -1 தொகுதி, ஒடிசா -4 தொகுதிகள், சிக்கிம் -1 தொகுதி, தெலுங்கானா -17 தொகுதிகள், திரிபுரா -1 தொகுதி, உ.பி. – 8 தொகுதிகள், உத்தரகாண்ட் -5 தொகுதிகள், மேற்கு வங்காளம் -2 தொகுதிகள், அந்தமான் -1 தொகுதி, லட்சத்தீவு -1 தொகுதி (மொத்தம் 91 தொகுதிகள்).

இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி

தமிழகம், புதுச்சேரி உள்பட13 மாநிலங்களில் 97 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அசாம் -5 தொகுதிகள், பீகார் – 5 தொகுதிகள், சத்திஷ்கார் -3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் -2 தொகுதிகள், கர்நாடகா -14 தொகுதிகள், மராட்டியம் 10 தொகுதிகள், மணிப்பூர் -1 தொகுதி, ஒடிசா -5 தொகுதிகள், தமிழகம் -39 தொகுதிகள், திரிபுரா -1 தொகுதி, உ.பி. – 8 தொகுதிகள், மேற்கு வங்காளம்-3 தொகுதிகள், புதுச்சேரி- 1 தொகுதி (மொத்தம் 97 தொகுதிகள்) .

மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி

14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கு நடக்கிறது. அசாம் -4 தொகுதிகள், பீகார் – 5 தொகுதிகள், சத்தீஷ்கார் -7 தொகுதிகள், குஜராத் – 26 தொகுதிகள், கோவா -2 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் -1 தொகுதி, கர்நாடகா -14 தொகுதிகள், கேரளா -20 தொகுதிகள், மராட்டியம்-14 தொகுதிகள், ஒடிசா -6 தொகுதிகள், உ.பி. -10 தொகுதிகள், மேற்கு வங்காள -5 தொகுதிகள், தத்ரா மற்றும் நகர் ஹவேளி -1 தொகுதி, டாமன் டையூ -1 தொகுதி (மொத்தம் 115 தொகுதிகள்) .

நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி

9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் நடக்கிறது. பீகார் – 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் -1 தொகுதி, ஜார்க்கண்ட் -3 தொகுதிகள், மத்திய பிரதேசம்- 6 தொகுதிகள், மராட்டியம் -17 தொகுதிகள், ஒடிசா -6 தொகுதிகள், ராஜஸ்தான் -14 தொகுதிகள், உ.பி. -13 தொகுதிகள், மேற்கு வங்காளம் -8 தொகுதிகள் (மொத்தம் 71 தொகுதிகள்).

ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ம் தேதி

7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. பீகார் -5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் -2 தொகுதிகள், ஜார்க்கண்ட் -4 தொகுதிகள், மத்திய பிரதேசம்- 7 தொகுதிகள், ராஜஸ்தான் -12 தொகுதிகள், உ.பி. -14 தொகுதிகள், மேற்கு வங்காளம் -7 தொகுதிகள் (மொத்தம் 51 தொகுதிகள்).

ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ம் தேதி

7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது. பீகார் – 8 தொகுதிகள், அரியானா -10 தொகுதிகள், ஜார்க்கண்ட் -4 தொகுதிகள், மத்திய பிரதேசம்- 8 தொகுதிகள், உ.பி. -14 தொகுதிகள், மேற்கு வங்கம் -8 தொகுதிகள், புதுடெல்லி -7 தொகுதிகள் (மொத்தம் 59 தொகுதிகள்).

ஏழாம் கட்ட தேர்தல் மே 19-ம் தேதி

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது. பீகார் 8 தொகுதிகள், ஜார்க்கண்ட் -3 தொகுதிகள், மத்திய பிரதேசம்- 8 தொகுதிகள், பஞ்சாப் -13 தொகுதிகள், மேற்கு வங்காளம் -9, சண்டிகார் -1 தொகுதி, உ.பி. -13 தொகுதிகள், இமாச்சல பிரதேசம் – 4 தொகுதிகள் (மொத்தம் 59 தொகுதிகள்). வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23-ம் தேதி நடைபெறுகிறது.