புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது 23 வயது எலெக்ட்ரீசியன்…!

Read Time:3 Minute, 17 Second

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது 23 வயது எலெக்ட்ரீசியன் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது.

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டது என தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்தது.


புல்வாமா தாக்குதலில் பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டது…!


இதனையடுத்து நடந்த விசாரணையில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது 23 வயது எலெக்ட்ரீசியன் அகமது கான் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புல்வாமாவில் உள்ள மிர் மொஹாலா பகுதியை சேர்ந்த 23 வயதான அகமது கான் என்ற முகமது பாய் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அகமது கான் பட்டப்படிப்பு முடித்து, ஐடிஐ படித்தவன்.


ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளான்.


அகமது கான் வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவினர் நடத்திய சோதனையில் புல்வாமா தாக்குதலுக்கு தேவையான காரை விலைக்கு வாங்கி, அதை அதில் அகமதுவுக்கு வழங்கியவன்.


2018-ம் ஆண்டு பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாத செயல்கள் அதிகம் நடைபெற காரணமாக இருந்த நூர் முகமது கொல்லப்பட்டான். அப்போது அவருடன் இருந்த அகமது கான் தலைமறைவானான். இப்போது அவனுடைய செயல்பாடு பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.


கடந்த ஆண்டு பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்ட சன்ஜவான் பயங்கரவாத தாக்குதல், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட லேத்போரா சிஆர்பிஎப் முகாம் தாக்குதலில் இவனுக்கு தொடர்பு இருந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முகமது கான் சாவு

இதற்கிடையே பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் முகமது கான் கொல்லப்பட்டான் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தொடர்பாக தகவல் அறிந்த பாதுகாப்பு படை நேற்று இரவு அவர்களை வேட்டையாடும் பணியை தொடங்கியது. இதில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதி முகமது கானும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.