பொள்ளாச்சி பயங்கரம் பெரும் கோபத்துடன் போராட்டத்தில் களமிறங்கிய மாணவர்கள்…!

Read Time:1 Minute, 46 Second

பொள்ளாச்சி பயங்கரம் விவகாரத்தில் மாணவர்கள் கோபத்துடன் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்று தரவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதற்கிடையே பொள்ளாச்சி சம்பவத்தில் கோபம் அடைந்த மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.

நெல்லை, திருச்சி மற்றும் கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று பிற பகுதியிலும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பொள்ளாச்சி சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பாடமாக அமையும் வகையில் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.

மன்னார்குடியில் ராஜகோபாலசாமி அரசினர் கலை கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தினர். கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களிலும் கோரிக்கை வலுத்துள்ளது.