பொள்ளாச்சி பயங்கரம்…. பாலியல் அரக்கன்களுக்கு உதவிய பெண்கள்…!

Read Time:2 Minute, 9 Second

பொள்ளாச்சி பயங்கரவத்தில் பாலியல் அரன்கன்களுக்கு பெண்கள் உதவியுள்ளனர் என தெரியவந்துள்ளது.


பொள்ளாச்சி ஆபாச வீடியோக்களும், சிக்கிய அரசியல் புள்ளிகளும்…!


பொள்ளாச்சி வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த பெண் தான் திருநாவுக்கரசு பிற பெண்களுடன் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளார். மேலும் அவர் தலைமறைவாக இருந்த போது அந்த பெண் தான் உதவி செய்துள்ளார். இந்த வழக்கில் தேவைப்பட்டால் விசாரணை அதிகாரியாக பெண் அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நர்ஸ்…

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் உறவினர் நர்ஸ் என தெரியவந்துள்ளது. அவருக்கு இந்தக் கும்பலின் அத்தனை நடவடிக்கைகளும் தெரியும். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அழைத்து சென்று, மது குடிக்க வைத்து, நாசப்படுத்தியுள்ளனர். அந்தப் பெண் கர்ப்பமானதும் அதை கலைப்பதற்கு இந்த நர்ஸ் உதவியுள்ளார்.

மாமியார்…

இளைஞர்கள் பண்ணை வீட்டில் பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். நம்பி அங்கு செல்லும் மாணவிகளிடம் வேலைக்காரிகளை அம்மா இதுதான் உன் மருமகள் என்று கூறியுள்ளனர். இது மாணவிகளுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது. பண்ணை வீட்டில் பணியாற்றிய பெண்களை அம்மாவாக நடிக்க கூறியுள்ளனர். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பெண்களை பிடித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.