இந்தியாவிற்கு எதிராக செயல்பட சீனா சூசகம்… ‘வேண்டாம்’ என அமெரிக்கா எச்சரிக்கை…!

Read Time:3 Minute, 15 Second

பயங்கரவாதத்திற்கு புகலிடம் கொடுத்து வளர்த்து வரும் பாகிஸ்தானின் மீது சீனா மிகவும் அதிகமான பாசம் கொண்டுள்ளது.

பயங்கரவாத பாகிஸ்தான் மீது கொண்ட அன்பினால் அந்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கையை எதிர்க்கிறது. ஐ.நா.பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை குழு தீர்மனத்தின் 1267-வது விதிப்படிஜெய்ஷ் பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா போராடி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மூன்று முறை போராடியும் பலன் கிடைக்கவில்லை. தொழில்நுட்ப காரணம் காட்டி பாதுகாத்து தீர்மானத்தை செல்லாமல் செய்ய செய்தது. புல்வாமா தாக்குதலை அடுத்து அவனை பயங்கரவாதியாக அறிவிக்க பிரான்ஸ் நடவடிக்கையை எடுக்கிறது.

பிரான்ஸ் நடவடிக்கை ஓட்டெடுப்பிற்கு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1945-இல் இருந்து அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகளுக்கு ஐ.நா. விவகாரங்களில் வீட்டோ எனப்படும் சிறப்பு அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளில் ஒரு நாடு மறுப்பு தெரிவித்தாலும் தீர்மானம் செல்லாது. இதனைதான் இந்தியாவிற்கு எதிராக சீனா பயன்படுத்துகிறது. புல்வாமா தாக்குதலின் போது கண்டனம் தெரிவித்த சீனா, பயங்கரவாத இயக்கம் பெயரை தெரிவிக்கவில்லை. இப்போதும் பாகிஸ்தானை பாதுகாக்கும் வகையிலே சூசகமாக கருத்து தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் லு காங் பேசுகையில், “சீனா தொடர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் 1267 குழுவின் ஆய்வில் பங்கு கொள்ளும்.” தீர்வு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுபோன்று கூறிதான் மூன்று முறை தடையை ஏற்படுத்தியது. இப்போதும் அதனையே கூறுகிறது. எனவே தடையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சீனாவை மறைமுகமாக எச்சரிக்கும் செய்தியையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. “மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஏற்படும் தோல்வி பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு,” எதிரானதாக அமையும் என அமெரிக்கா எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகள் அனைத்தும் மசூத் அசாருக்கு பொருந்தும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.