கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம் தொகுதி உடன்பாடு

Read Time:1 Minute, 19 Second

கர்நாடகாவில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையிலான இழுபறி முடிவுக்கு வந்தது.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ.க்களின் அமைச்சர் பதவி ஆசையால் ஒவ்வொருநாளும் பிரச்சனையிலே ஆட்சி செல்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தன்வசப்படுத்துவதில் பா.ஜனதா தீவிரமாக செயல்படுகிறது.

இதற்கிடையே கர்நாடக சட்டசபையில் தனித்தனியாக போட்டியிட்ட காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக சந்திக்க பேசிவந்தது.

கூட்டணியிடையே தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்தது. இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இதன்படி காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 இடங்களிலும் போட்டியிடும் என ஒப்பந்தம் கையெழுத்தானது.