நிறுத்துங்க. விமானத்த நிறுத்துங்க.. ‘குழந்தைய மறந்துட்டேன்…!’ விமானிகளை கதிகலங்கவைத்த பெண்…!

Read Time:2 Minute, 12 Second

விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்டு தாய் விமானத்தில் ஏறி பறந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

எங்கேயாவது வெளியே செல்லும் போது நம்முடைய பொருட்களை மறந்துவிடுவோம்… இது எல்லோருக்கும் இருக்கும் சாதாரண மறதியாககூட இருக்கலாம். ஆனால், இளம்தாய் ஒருவர் என்னுடைய குழந்தைய விமான நிலையத்தில் மறந்து விட்டுவிட்டேன் என விமானிகளை கதிகலங்க வைத்துள்ளார். ஜெட்டாவில் இருந்து மலேசியாவிற்கு சவுதி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

விமானத்தில் பெண் ஒருவர் குழந்தையை விமான நிலையத்தில் விட்டது தெரியாமல் பயணம் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்ததும் குழந்தையை காணவில்லை என பதறியுள்ளார். நிறுத்துங்க. விமானத்த நிறுத்துங்க.. விமான நிலையத்தில் என்னுடைய‘குழந்தைய மறந்துட்டேன்…!’ என எல்லோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார். பின்னர் விமானிகள் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தை திருப்ப அனுமதியை கோரியுள்ளனர்.

உடனடியாக அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. உடனடியாக விமானம் மீண்டும் ஜெட்டாவுக்கு திரும்ப பறந்தது.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு, பயணிகளுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டாலோ விமானங்கள் இவ்வாறு பாதியில் தரையிறங்கும். முதல்முறையாக இளம்தாய் விமான நிலையத்தில் குழந்தையை விட்டுவிட்டதால் விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளது… நல்லவேளை புறப்பட்டதும் நினைவுப்படுத்தியுள்ளார், இல்லையென்றால் மலேசியாவிற்கே சென்றிருப்பார் என சமூக வலைதளங்களில் டுவிட் செய்து வருகின்றனர்.