களமிறங்கிய ஜெ. தீபா… 40 தொகுதிகளிலும் தனியாகத்தான் போட்டியென அறிவிப்பு…!

Read Time:1 Minute, 53 Second

நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்களின் விருப்பம் காரணமாக போட்டியிட முடிவு செய்யப்பட்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ. தீபா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தொண்டர்களின் விருப்பம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 சட்டசபைத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். தேர்தலில் போட்டியிட இதற்கான விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் கருத்து கேட்டக்கப்பட்டது. அதில் அவர்கள் இந்தத் தேர்தலில் நாம் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்கள். கட்சியின் தொண்டர்களும் அதே விருப்பத்தை முன்வைத்தனர். இதனால் நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.

மேலும் பேசுகையில் 3 மாதங்களுக்கு முன்பு அதிமுகவுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்திருந்தோம். சரியான முடிவு எட்டப்படாததால் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

எனது தலைமையிலான அணி வலுவிலக்கவில்லை, அணியை அழிக்க பலர் எண்ணுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.