2019 நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜனதாவின் கோஷம் தேர்வு செய்யப்பட்டது…

Read Time:1 Minute, 45 Second

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவின் கோஷம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் வியூகத்துடன் களமிறங்கி வருகிறது. தேர்தல் பிரசாரங்களும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கோஷம் பா.ஜனதாவினரால் முழங்கப்பட்டு வருகிறது.

இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவின் கோஷம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‘மோடியால் சாத்தியப்படும்’. இதுதான், நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதாவின் கோஷம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரும், பா.ஜனதா பிரசார குழுவின் தலைவருமான அருண் ஜெட்லி பேசுகையில், பிரதமர் மோடி 24 மணி நேரமும் பணியாற்றி உள்ளார். விரைவாக புரிந்து கொள்ளக்கூடிய திறன்கொண்ட அவர், சிக்கலான பிரச்சினைகளில் விரைவாக முடிவெடுத்து ‘செயல்படக்கூடியவர்’ என்ற அவரது நற்பெயர், பெரும்பாலான இந்தியர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மோடியின் ஆட்சியில், வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உயர்ந்துள்ளது.

பணவீக்கம் குறைந்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை அளித்துள்ளார். அதே அரசு எந்திரத்தை கொண்டு, மோடி இச்சாதனையை படைத்துள்ளார். எனவே, மோடியால் சாத்தியப்படும்’ என்ற கோஷத்தை தேர்வு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.