காட்டு யானைகள் வருகையை தடுக்க கொடூரமானச் செயல்… ஆண் யானை உயிரிழப்பு…!

Read Time:4 Minute, 7 Second

காட்டு யானைகள் வருகையை தடுக்க மேற்கொள்ளப்பட்ட கொடூரமானச் தடுப்பு செயலால் ஆண் யானை உயிரிழந்தது.

இந்தியா முழுவதும் காட்டழிப்பு, வனம் ஆக்கிரமிப்பு, யானைகள் வழித்தடங்கள் அழிப்பு தொடர் கதையாகி வருகிறது. வன விலங்குகளின் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் மனிதர்கள் மேற்கொள்ளும் கொடூரச் செயல் மேலும் அதிகரித்து செல்கிறது. இப்போது வெளியாகியுள்ள செயல் இந்திய ராணுவம் மேற்கொண்டது என்பதுதான் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. வனவிலங்குகள் விளைப்பயிர்களை நாசம் செய்வதாக வேலி அமைத்து மின்சாரம் பாய்ச்சி விவசாயிகள் ஒருபக்கம் ஆபத்தை விளைவிக்கும் நேரத்தில், அசாமில் ராணுவம் யானைகள் வருகையை தடுக்க கூர்மையான இரும்பு கம்பிகளை தரையில் பதித்து வைத்துள்ளது.


மனிதர்கள் – யானை மோதலில் 3 ஆண்டுகளில் 1,713 பேர் உயிரிழப்பு, 373 யானைகள் உயிரிழப்பு


அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள அம்சாங் வனவிலங்குகள் சரணாலையம் பகுதியில் யானைகளை தடுக்கும் வகையில் வனத்தை சுற்றிலும் கூர்மையான இரும்பு கம்பிகளை ராணுவம் தரையில் பதித்து வைத்துள்ளது. ராணுவ நிலைக்குள் யானைகள் வரக்கூடாது என்பதற்காக இதனை செய்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ராணுவம் பதித்து வைத்த இரும்பு கம்பிகளில் மிதித்து இதுவரை இரு யானைகள் உயிரிழந்து உள்ளது. பல யானைகள் காயங்களுடன் சுற்றுகிறது.

யானை வழித்தடத்தில் உள்ள கூர்மையான இரும்பு கம்பி பலகை

சமீபத்தில் யானையொன்று அப்பகுதியில் காயங்களுடன் ஆற்றுப்பகுதியில் இறந்து கிடந்தது. பிரேத பரிசோதனையில் அதனுடைய கால்களில் அதிகமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உணவுக்காக நகர முடியவில்லை. பின்னர் ஒன்றும் செய்ய முடியாமல் யானையின் ஒவ்வொரு உறுப்பும் செயல் இழக்க தொடங்கி உயிரிழந்துள்ளது. கடந்த டிசம்பரில் இருந்து இதுபோன்று இரண்டு யானைகள் இதுபோன்று உயிரிழந்து உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 செப்டம்பரில் இந்த கொடூரமான செயலை நிறுத்தவேண்டும், இரும்பு கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் ராணுவம் தரப்பில் நீக்கப்படவில்லை. இப்போது யானைகள் உயிரிழப்பு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் உடனடியாக கம்பிகளை நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் மேனகா காந்தி, காடுகளுக்கு மத்தியில் இதுபோன்று இரும்பு கம்பிகளை பதிப்பது ராணுவத்தின் பணி கிடையாது. இதுதொடர்பாக பிராந்திய கமாண்டரிடம் பேசினேன். ஆனால் இதுபற்றி எதுவும் தெரியாது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். இப்போது இந்தியாவில் 15 ஆயிரத்திற்கும் குறைவான யானைதான் உள்ளது. அவைகள் அனைத்தையும் கொள்ள போகிறமோ? என காட்டமாக கேள்வியை எழுப்பியுள்ளார். ராணுவ தளபதி பிபின் ராவத்திடமும் பேசி நடவடிக்கையை எடுக்க மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே இரும்பு கம்பிகளை அகற்றும் பணியை ராணுவம் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.