காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் சிலையில் அறுத்து எடுக்கப்பட்ட கந்தர் சிலை…!

Read Time:5 Minute, 41 Second

ஏகாம்பரநாதர் கோவிலின் எந்த சிலையிலும் தங்கம் இல்லை, சிலைகள் மாயம், கந்தர் சிலை மாயம் என அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள சிவன், பார்வதி, முருகன் ஆகியோர் சேர்ந்து இருக்கும் சோமாஸ்கந்தர் சிலை 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சோமாஸ்கந்தர் சிலையில் சிவனும், பார்வதியும் குழந்தை முருகனை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பார்கள். 1300 ஆண்டுகள் பழமையான இந்த சிலை ஆங்காங்கே உடைந்து சேதம் அடைய ஆரம்பித்தது என்று கூறப்பட்டது. இதனையடுத்து இந்த சிலைக்கு பதில் புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டு, கோவிலில் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

புதிய சிலை செய்யப்பட்டதில் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியது. சிலையை அனுமதிக்கப்பட்ட எடையைவிட கூடுதல் எடைக்கு செய்யப்பட்டது. சிலையை செய்ய கோவில் தங்கத்தை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவினால் பக்தர்களிடம் பெறப்பட்டது. இதற்கு ஆவணங்கள் கிடையாது. புதிய சிலையில் 75 சதவிதம் தங்கம் சேர்க்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிலையை ஆய்வு செய்த போது எள் அளவும் தங்கம் இல்லை. இப்படி பல்வேறு அதிர்ச்சி தகவல்களுடன் விசாரணை சென்றுக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிலை தடுப்பு பிரிவு விசாரிக்கிறது.

சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி நேற்று கைது செய்யப்பட்டார். தங்கத்தை கொள்ளையடிக்கும் நோக்குடன் அதிக எடையில் சிலை செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் தொடர்கிறது. விசாரணைக்கு மத்தியில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிவருகிறது.

2018-ம் ஆண்டு பழைய சிலையை ஆய்வு செய்யும் போது அச்சிலையிலும் தங்கம் கிடையாது. 1300 ஆண்டுகள் சோழர்கள்கால பழமையான சிலையை திருட தொடர்ச்சியான முயற்சிகள் நடைபெற்றுள்ளது என அப்போது போலீஸ் தகவல்களை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியது. 2015-ம் ஆண்டுவரையில் சாமி ஊர்வலத்திற்கு பழைய சிலைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 1993-ம் ஆண்டே இந்த சிலையில் இருந்த கந்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.

கந்தர் சிலை கடந்த 1993-ம் ஆண்டு காணாமல் போனது. அப்போது சாமி ஊர்வலத்தின்போது அது உடைந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக வலுவான புகார் தெரிவிக்கப்படவில்லை. கோவிலிருந்து சிவன் மற்றும் பார்வதி சிலைகள் மாயமாகியுள்ளது, சிலைக்கு மேல் பகுதியில் இருக்கும் திருவாச்சியை அகற்றவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என செய்தி வெளியாகியது.

பின்னர் வழக்கானதும் சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது.

புதிய சிலை விவகாரம் தீவிரம் அடைந்த போது கந்தர் சிலை உடைந்து விழவில்லை என்றும், அறுத்து எடுக்கப்பட்டு வெளிநாட்டு அருங்காட்சியகத்துக்கு விற்கப் பட்டிருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

கோவிலில் மாயமான கந்தர் சிலையையும், மற்றொரு சிவன் சிலையையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவிலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட சிலைகள் திருடப்பட்டுள்ளது என்பதை போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இருப்பினும் இந்து சமய அறநிலையைத் துறை மூடிமறைக்க முயற்சி செய்கிறது. புதிய வழக்குகள் பதிவு செய்யப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சோமாஸ்கந்தர் சிலையில் இருந்து கந்தர் சிலை அறுத்து எடுத்து திருடப்பட்டது தொடர்பான வழக்கானது கண்டுபிடிக்க முடியாமல் முடித்து வைக்கப்பட்டன. அறுத்து எடுக்கப்பட்ட ஸ்கந்தர் சிலை வெளிநாட்டு மியூசியத்தில் உள்ளதாக தெரிகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். புதிய சிலை நீதிமன்றம் வசம் சென்றுள்ளது. இவ்வாண்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பழைய சோமாஸ்கந்தர் சிலையை சீரமைத்து பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. கோவிலில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் செய்யப்பட்டுள்ளது.

பழைய சிலை சீரமைப்பு பணி…