2019 நாடாளுமன்றத் தேர்தல்: அதிமுக, பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

Read Time:3 Minute, 5 Second

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

அதிமுக சார்பில் ஏற்கெனவே மக்களவை உறுப்பினர்களாக உள்ள ஆறு பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த நான்கு பேருக்கும், மூத்த நிர்வாகிகளாக உள்ள நான்கு பேரின் வாரிசுகளுக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


இப்போது எம்.பி.யாக உள்ள பி.வேணுகோபால், ஜெ.ஜெயவர்தன், மரகதம் குமரவேல், செஞ்சி வெ.ஏழுமலை, சி.மகேந்திரன், மு.தம்பிதுரை ஆகியோர் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட உள்ளனர்.


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் ஆகியோரின் வாரிசுகளுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


தமிழக முன்னாள் அமைச்சர்களாக இருந்த கே.பி.முனுசாமி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், என்.ஆர்.சிவபதி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் மக்களவைத் தேர்தலில் களம் இறங்கவுள்ளனர்.


தொகுதி வாரியாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் விவரம்:-

திருவள்ளூர் (தனி) – டாக்டர் பி.வேணுகோபால்.
தென்சென்னை – டாக்டர் ஜெ.ஜெயவர்தன்
காஞ்சீபுரம் (தனி) – மரகதம் குமரவேல்
கிருஷ்ணகிரி – கே.பி.முனுசாமி
திருவண்ணாமலை – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஆரணி – செஞ்சி வெ.ஏழுமலை
சேலம் – கே.ஆர்.எஸ். சரவணன்
நாமக்கல் -பி.காளியப்பன்
ஈரோடு – வெங்கு என்ற ஜி.மணிமாறன்
திருப்பூர்-எம்.எஸ்.எம்.ஆனந்தன்
நீலகிரி(தனி) – எம்.தியாகராஜன்
பொள்ளாச்சி-சி.மகேந்திரன்
நெல்லை- பி.எச்.மனோஜ்பாண்டியன்
கரூர் – மு.தம்பிதுரை
பெரம்பலூர் – என்.ஆர்.சிவபதி
சிதம்பரம் – பொ.சந்திரசேகர்
மயிலாடுதுறை – எஸ்.ஆசைமணி
நாகப்பட்டினம் (தனி) – தாழை ம.சரவணன்
மதுரை – வி.வி.ஆர்.ராஜ்சத்யன்
தேனி-ப.ரவீந்திரநாத்குமார்

பாமக வேட்பாளர் பட்டியல்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 5 வேட்பாளர்களைக் கொண்ட முதலாவது பட்டியலை வெளியிட்டது. அதன் விவரம்: தருமபுரி- அன்புமணி ராமதாஸ், விழுப்புரம்- வடிவேல் ராவணன், கடலூர்- இரா.கோவிந்தசாமி, அரக்கோணம்- ஏ.கே.மூர்த்தி, மத்திய சென்னை- சாம் பால்.


திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தூத்துக்குடியில் கனிமொழி போட்டி