வேட்பாளர்கள் அனைவரும் செல்வந்தர்களாகவே உள்ளார்களே? மு.க. ஸ்டாலின் பதில்

Read Time:3 Minute, 13 Second

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.


திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தூத்துக்குடியில் கனிமொழி போட்டி


வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் பேசுகையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம். ஒதுக்கியிருக்கிறோம் என்பதைவிட, அனைவரும் உட்கார்ந்து பேசி பகிர்ந்து கொண்டிருக்கிறோம். திமுக ஜனநாயக இயக்கம். வேட்பாளர் தேர்வும் ஜனநாயக அடிப்படையில் நடந்தது. விருப்ப மனு அளித்தவர்களிடம் யார் போட்டியிட்டால் சரியாக இருக்கும் என அனைவரிடமும் கலந்து பேசி, தலைமை சார்பில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுதான் பட்டியலாகி உள்ளது. தகுதியானவர், பொருத்தமானவரே வேட்பாளராக நிறுத்தப்படுவர் என்றும், யார் வேட்பாளராக நின்றாலும் உதயசூரியனே நிற்கிறது என்று கருதும் தொண்டர்களைத் திமுக பெற்றிருக்கிறது. கருணாநிதியே அனைத்து தொகுதியிலும் வேட்பாளர் என்று கருதி திமுகவினர் பணியாற்ற வேண்டும் என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலினிடம், பெரும்பாலனான வேட்பாளர்கள் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். பொதுவாக தமிழகத்தில் எல்லா கட்சியிலும் இதுபோன்ற நிலைதான் இருக்கிறது, ஏழை மக்கள் போட்டியிட முடியாத சூழல், பண வசதியில்லாதவர்கள் வெற்றிகரமாக போட்டியிட்ட வெற்றிப்பெற முடியாதா? என கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலின், எங்களை பொறுத்தவரையில் நீங்கள் நினைக்கும் நோக்கத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை. வெற்றிப்பெற வேண்டும். தகுதியின் அடிப்படையில், அவர்கள் இந்த கட்சிக்கு ஆட்சியுள்ள பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள்ளனர்.

20-ம் தேதியிலிருந்து திருவாரூரில் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


2019 நாடாளுமன்றத் தேர்தல்: அதிமுக, பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு


வெளியிடப்பட்டுள்ள அதிமுக, திமுக வேட்பாளர்கள் பட்டியலில் பெரும்பாலும் கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கும், பழைய முக்கிய புள்ளிகள் மற்றும் மாற்று கட்சியிலிருந்து வந்த பிரமுகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.