மதுரையில் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவு

Read Time:1 Minute, 49 Second

மதுரையில் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தேதியை மாற்ற முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தினமும் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் பெறப்படும். விடுமுறை தினங்களான வரும் 23, 24 ஆகிய தேதிகளில் விண்ணப்பம் பெறப்பட மாட்டாது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் தேர்தல் நடப்பதால் ஏப்ரல் 18-ம் தேதி இரவு 8 மணி வரை நடத்தப்படும். மதுரை தவிர மற்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஒரு மணிநேரம் நீட்டிக்கப்படுகிறது. சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல் எதுவும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.