பா.ஜனதா கட்சி தலைமை சொல்வதற்கு முன்னரே வேட்பாளர்கள் அறிவிப்பு…!

Read Time:2 Minute, 10 Second

பா.ஜனதா கட்சி தலைமை அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாகவே தமிழக பா.ஜனதா வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடவுள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து வேட்பாளர்கள் யாரென்று தெரியாத நிலை தொடர்ந்தது. அதிகாரப்பூர்வமாக எந்தஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், தலைமை அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாகவே தமிழக பா.ஜனதா வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பா.ஜனதா வேட்பாளர்கள் இவர்கள்தான் என 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார். தூத்துக்குடியில் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,

  • கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
  • ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்,
  • சிவகங்கையில் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,
  • கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

இதேபோன்று கட்சியின் பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற உழைப்போம்…” என பதிவிட்டுள்ளார். கட்சி அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே இப்படி ஒவ்வொருவரும் வேட்பாளரை அறிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.